டி.கே.எஸ்.இளங்கோவனை ஓரம் கட்டிய திமுக…. செய்தித் தொடர்பு செயலாளர் பதவியில் இருந்து விடுவிப்பு !!

Published : Oct 15, 2018, 10:52 PM IST
டி.கே.எஸ்.இளங்கோவனை ஓரம் கட்டிய திமுக…. செய்தித் தொடர்பு செயலாளர் பதவியில் இருந்து விடுவிப்பு !!

சுருக்கம்

திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளராக பணியாற்றி வந்த டி.கே.எஸ்.இளங்கோவன் அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள செயிதக் குறிப்பில், திமுகவின் செய்தி தொடர்பு செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த  டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததையடுத்து , சென்னை அண்ணா அறிவாலயத்தில், அவரின் முழு உருவச் சிலை வரும் நவம்பர் 15 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்த விழாவிற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இது தொடர்பாக டி.கே.எஸ்.இளங்கோவன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கலைஞர் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு அதிமுகவினரை அழைக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார். தலைவரை ஆலோசிக்கமால் தன்னிச்சையாக கூறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?