ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் வைரமுத்து ஜெயிலில் இருந்திருப்பார்!! பாலியல் தொல்லை விவகாரத்தில் குமுறிய பெண்கள் ….

Published : Oct 15, 2018, 08:49 PM IST
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் வைரமுத்து  ஜெயிலில் இருந்திருப்பார்!! பாலியல் தொல்லை விவகாரத்தில் குமுறிய பெண்கள் ….

சுருக்கம்

கவிஞர் வைரமுத்து, பாடகி சின்மயிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தாக சுமத்திய குற்றச்சாட்டு விவகாரத்தில் இந்நேரம் தமிழக முதலவமைச்சராக ஜெயலலிதா இருந்திருந்தால், அவர் ஜெயிலில் தான் இருந்திருப்பார் என அவரால் பாதிக்கப்பட்ட  பெண்கள் குமுறித் தள்ளினர்.

#metoo என்ற ஹாஷ்டாக்குடன் நாடு முழுவதும் உள்ள பெண்கள் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் பதிவுசெய்து வருகின்றனர்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு  பின்னணிப் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக பதிவிட்டார். 

அக்டோபர் 9ஆம் தேதியன்று அவர் வெளியிட்ட பதிவில், இந்த சம்பவம் 2005-2006ஆம் ஆண்டில் நடந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இலங்கைத் தமிழர்களுக்காக 'வீழமாட்டோம்' என்ற ஆல்பத்தில் தானும் மாணிக்க விநாயகமும் பாடியிருந்ததாகவும்  இது தொடர்பான வெளியீட்டு விழா, சுவிட்ஸர்லாந்தின் சூரிக் அல்லது பெர்ன் நகரில் நடந்ததாகவும் கூறிய சின்மயி, இந்த விழாவில் தாங்களும் கலந்துகொண்டு பாடியதாகக் கூறியுள்ளார்.

பின்னர் வைரமுத்து தனது உதவியாளர் ஒருவர் மூலம் ஹோட்டல் ரூமுக்கு சின்மயியை வரச் சொன்னார் என்றும் குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து கவிஞர் வைரமுத்து மீது ஏராளமான பெண்கள் வரிசை கட்டி பாலியல் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் சின்மயி தலைமையில் வைரமுத்து மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர்கள் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் வைரமுத்து தரப்பில் முன் ஜாமீன் வாங்குவதற்கு முயற்சி நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மீ டு புகாரில் சிக்கிய ஆண்கள் மீது  சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. இதையடுத்த வைரமுத்து சட்டத்தின் பிடியில் சிக்குவார் என கூறப்படுகிறது.

இந்நிலையில்  ஜெயலலிதா மட்டும் இன்நேரம் உயிருடன் இருந்திருந்தால் சின்மயி உள்ளிட்ட பெண்கள் வைரமுத்து மீது  சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுக்கு அவரைத் தூக்கி ஜெயிலில் தள்ளியிருப்பார் என பாதிக்கப்ட்ட பெண்கள் குமுறி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!