மோடியை எதிர்க்கிற மாதிரி ஸ்டாலின் நடிக்கிறார்!: நாலாபுறமும் வெளுத்துக்கட்டும் நாம்தமிழர் சீமான்!

By Vishnu PriyaFirst Published May 3, 2019, 3:30 PM IST
Highlights

ஆபாச ஆடியோ விவகாரம் பற்றி எரிந்து அடங்கும் வரை அமைதி காத்த சீமான், இதோ மீண்டும் பொங்கி எழ  துவங்கிவிட்டார். முழுக்க முழுக்க தன் இமேஜை கெடுத்து, காலி செய்து, கட்சியை அழிக்கும் நோக்கில் பெரிய கட்சி ஒன்று  செய்யும் வேலையே இந்த ஆடியோ பரப்புதல்! என்று சீறுகிறார். 
 

ஆபாச ஆடியோ விவகாரம் பற்றி எரிந்து அடங்கும் வரை அமைதி காத்த சீமான், இதோ மீண்டும் பொங்கி எழ  துவங்கிவிட்டார். முழுக்க முழுக்க தன் இமேஜை கெடுத்து, காலி செய்து, கட்சியை அழிக்கும் நோக்கில் பெரிய கட்சி ஒன்று  செய்யும் வேலையே இந்த ஆடியோ பரப்புதல்! என்று சீறுகிறார். 

கடந்த சில வருடங்களாகவே தி.மு.க.வை வெச்சு செய்து வரும் சீமான், அதற்கு பழிவாங்கவே தன்னை இப்படி அசிங்கப்படுத்திட அக்கட்சி முயல்வதாகவும் தன் இயக்கப் பிள்ளைகளிடம் பொங்கியிருக்கிறார். அது மட்டுமா? மோடியை எதிர்ப்பது போல் ஸ்டாலின் நடிக்கிறார் என்று சீமான் போட்டுத் தாக்கியிருப்பதுதான் ஹைலைட்டே. 


ஸ்டாலினை நோக்கி சீமான் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?....
“தி.மு.க.வை நான் மிக மிக அதிகமா விமர்சித்து தள்ளுறதா சொல்றாங்க. தம்பி, நான் பார்க்கிறது வெளுக்கிற வேலை. அதுல எசமான் துணில், வேலைக்காரன் துணி, ஏழை துணின்னு பிரிச்சு பார்க்க முடியாது. எந்த துணியில அழுக்கு அதிகமா இருக்குதோ, அதை அடிச்சு பிழிஞ்சு துவைச்சு தொங்கவிட வேண்டிதான். 

தி.மு.க. துணில அவ்வளவு அழுக்கு அப்பிக்கிடக்குது. அப்ப ஸ்டாலை விமர்சித்து துவைச்செடுக்கத்தானே செய்யணும். ஒண்ணு சொல்லட்டுமா....தவறுகளோட ஊற்றுக்கண்ணே அந்தக் கட்சிதான். தவறான அரசியலின் துவக்கமே கருணாநிதி முதல்வரானதுதான். எளிமையா சொல்றதா இருந்தால்...அண்ணாவின் ஒன்றரை வருஷங்களைக் கழிச்சுட்டு பார்த்தால், தி.மு.க. ஆட்சியில் வெறும் லஞ்சமும், ஊழலும்தான் மிஞ்சும். 


தி.மு.க.வை திட்டித் தீர்க்கும் அஜெண்டாவை எனக்கு பா.ஜ.க. வழங்கியிருக்குதுன்னு வதந்தியா கெளப்பிவிடுறாங்க. உண்மையை சொல்றதுன்னா....மோடியை எதிர்க்கிற மாதிரி ஸ்டாலின் நடிக்கிறார். பா.ஜ.க.வை எதிர்க்கிற மாதிரி தி.மு.க. நடிக்குது அவ்வளவுதான். 
அந்த கட்சி மேலே உண்யான வெறுப்புல தி.மு.க. இருந்திருந்தால், தமிழகத்துல பா.ஜ.க. போட்டியிட்ட ஐந்து தொகுதிகளிலும் நேருக்கு நேர் நின்னு எதிர்த்திருக்க வேண்டிதானே? ஏன் ஒரேயொரு  தொகுதியில் மட்டும் பெயருக்கு எதிர்க்கணும். இதுல இருந்தே தெரியலையா இது நடிப்புன்னு. 


நாங்க வன்மையாக பா.ஜ.க.வை எதிர்க்கிறோம். நாங்க அவங்க பி. டீம் இல்லை, ஆனால் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் மெயின் டீமே தி.மு.க.தான்.” என்று விளாசியிருக்கிறார் மனுஷன்.!

click me!