தமிழர்களுக்கு ஏற்ற வகையில் சட்டத்தை மாற்ற முடியாது - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

 
Published : Jan 28, 2018, 09:54 AM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
தமிழர்களுக்கு ஏற்ற வகையில் சட்டத்தை மாற்ற முடியாது - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

சுருக்கம்

srilanka will not make act upon india interest said srilanka fishery minister

இலங்கை மீன்பிடி சட்டத்தில், இந்தியாவுக்கு ஏற்ற வகையில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது என அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா கூறியுள்ளார்.

எல்லா தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களையும் படகுகளையும் சிறைபிடிப்பதை இலங்கை கடற்படை வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில், தமிழக மீனவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், இலங்கை அரசு சட்டத்திருத்தம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி, இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழையும் படகுகள் மற்றும் கப்பல்களுக்கு அபராதத்தை அதிகரிக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் இலங்கை அரசின் இந்த சட்டத்திருத்தத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். இந்தச் சட்ட திருத்தத்தைத் திரும்பப் பெற இலங்கை அரசை வலியுறுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்தா அமரவீரா, இலங்கைக் கடல் பரப்பில் சட்டவிரோதமாக அத்துமீறும் மீன்பிடி படகுகளுக்காக இதுவரை அறிவிக்கப்பட்டு வந்த 1.5 மில்லியன் ரூபாய் அபராத சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் மூலமாக ரூ.60 லட்சம் முதல்1.75 கோடி இலங்கை ரூபாய் வரை அபராதமாக விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இலங்கையின் மீன்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கிலேயே சட்டத்தில் திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.  இதன்மூலம் தமிழக மீனவர்கள் பாரம்பர்ய மீன்பிடித் தொழிலை செய்வதற்கு எமது கடற்பரப்பு இனி இடமளிக்காது என்பதில் இலங்கை அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. அதேநேரத்தில், எங்கள் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக வரும் எந்தவொரு வெளிநாட்டு மீன்பிடி படகுகளுக்கும் இடமளிக்கப்போவதில்லை.

இலங்கை மீன்பிடித் திருத்தச் சட்டத்தில் இந்திய மீனவர்களுக்கு ஏற்றவாறு திருத்தங்களை மேற்கொள்ள முடியாது. இலங்கை மீன்பிடி சட்டத்தில் செய்யப்பட்டிருக்கும் திருத்தத்துக்காகப் போராட்டம் நடத்துவதை விடுத்து, தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டாது தங்கள் கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பதே சிறந்தது என தெரிவித்துள்ளார்.

புதிய சட்டத்திருத்தத்தை இலங்கை திரும்பப்பெற வலியுறுத்துமாறு மத்திய அரசை தமிழக அரசும் மீனவர்களும் வலியுறுத்திவரும் நிலையில், இலங்கை மீன்வளத்துறையின் இந்த பேச்சு, மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!