'இலங்கை பொய் பேசுகிறது' - தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனம்

Asianet News Tamil  
Published : Mar 07, 2017, 04:30 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
'இலங்கை பொய் பேசுகிறது' - தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனம்

சுருக்கம்

Thangachimadam portion Rameswaram fishermen were fishing near a pod Danushkodi at around 8pm

ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நெற்று இரவு 8 மணி அளவில் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடத்தை சேர்ந்த டிட்டோ என்பவரின் படகின் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் ராமேஸ்வரம் மீனவர் பிரிட்சோ என்பவர் துப்பாக்கிச் சூட்டால் கொல்லப்பட்டார். உடன் சென்ற மற்றொரு மீனவரும் இத்தாக்குதலில் காயமடைந்தார்.

இலங்கை கடற்படையின் இந்த அராஜகத்தைக் கண்டித்து தங்கச்சி மடத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசின் சார்பில் கொல்லப்பட்ட பிரிட்சோ குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் தமிழக மீனவர் துப்பாக்கி சூட்டிற்கும் இலங்கைக்கும் சம்பந்தமில்லை என இலங்கை அரசு மறுப்பு தெரிவத்துள்ளது.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசுகையில், துப்பாக்கி சூட்டிற்கு காரணம் நாங்கள் அல்ல என இலங்கை மறுத்து வருவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் எனவும் இலங்கை அப்பட்டமாக பொய் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்
TVK Cabinet: விஜய் அமைச்சரவை பட்டியல்: நிதி அமைச்சர் செங்கோட்டையன்! ஆதவ் அர்ஜுனா, ஆனந்துக்கு என்ன துறை?