ஸ்ரீ மாரியம்மன் கோயில் சாமி ஊர்வலம்.. காரில் எதிரே வந்த தி.க தலைவர் கி.வீரமணி என்ன செய்தார் தெரியுமா?

By vinoth kumarFirst Published Apr 20, 2022, 11:13 AM IST
Highlights

நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மற்றும் மாநில உரிமை மீட்பு பரப்புரை பிரசார பயணத்தை திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி நடத்தி வருகிறார். கடந்த 3-ம் தேதி நாகர்கோவிலில் இந்த பயணத்தை தொடங்கி அனைத்து மாவட்டங்கள் வழியாக வருகிற 25-ம் தேதி சென்னையில் நிறைவு செய்கிறார். 

நீட் எதிர்ப்பு பரப்புரை நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பும் வழியில் ஸ்ரீ மாரியம்மன் கோயில் சாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது சிறிது நேரம் வேனில் காத்திருந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஊர்வலம் முடிந்த பிறகு புறப்பட்டுச் சென்றார்.

நீட் தேர்வு எதிர்ப்பு

நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மற்றும் மாநில உரிமை மீட்பு பரப்புரை பிரசார பயணத்தை திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி நடத்தி வருகிறார். கடந்த 3-ம் தேதி நாகர்கோவிலில் இந்த பயணத்தை தொடங்கி அனைத்து மாவட்டங்கள் வழியாக வருகிற 25-ம் தேதி சென்னையில் நிறைவு செய்கிறார். இந்நிலையில், கரூர் சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

கி.வீரமணி ஆவேசம்

அப்போது, 100 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் படிக்க முடியாது. இன்று, பெரியார் பிறந்த மண்ணில் ஒரு பெண் மேயராக அமர்ந்து இருக்கிறார். பெண்கள் அனைத்து துறைகளிலும் பணியாற்றுகிறார்கள். இதுதான் நமது வெற்றி. நம்மால் விரட்டப்பட்ட சமஸ்கிருதம் இப்போது நீட் தேர்வு என்ற வடிவில் நுழைந்து உள்ளது. அதனை நாம் விரட்ட வேண்டும் என்றார். 

கோயில் சாமி ஊர்வலம்

இதனையடுத்து, நிகழ்ச்சி முடிந்து அவரது காரில் சென்ற வழியில் நீலிமேடு அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய பூத்தட்டு ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, ஊர்வலத்திற்கு மதிப்பளித்து தி.க கி.வீரமணி சுமார் 10 நிமிடம் அவரது வேனிலேயே அமர்ந்திருந்தார். பின்னர், ஊர்வலம் முடிந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். 

click me!