தமிழகத்திற்கு தஞ்சம் தேடி வரும் இலங்கைத் தமிழர்களை அகதிகளாக அறிவிக்க வேண்டும்... ராமதாஸ் வலியுறுத்தல்!!

Published : Apr 25, 2022, 05:22 PM IST
தமிழகத்திற்கு தஞ்சம் தேடி வரும் இலங்கைத் தமிழர்களை அகதிகளாக அறிவிக்க வேண்டும்... ராமதாஸ் வலியுறுத்தல்!!

சுருக்கம்

தமிழகத்திற்கு தஞ்சம் தேடி வரும் இலங்கைத் தமிழர்களை அகதிகளாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று  பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

தமிழகத்திற்கு தஞ்சம் தேடி வரும் இலங்கைத் தமிழர்களை அகதிகளாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று  பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பணவீக்கம், கையிருப்புக் குறைவு, அந்நிய செலாவணி, சுற்றுலாத்துறை முடக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களான மருந்துகள், பால், மாவு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேசமயம் இலங்கையில் வாழவழியில்லாத மக்கள்  அகதிகளாக தமிழகத்திற்கு வருகை தருகின்றனர்.

இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு தனுஷ்கோடியை அடைகின்றனர். இலங்கையில் இருந்து பைபர் படகில் மேலும் 3 சிறுவர்கள் உட்பட 15 பேர் தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர் கோவில் பகுதிக்கு வந்துள்ளனர். இதுவரை இலங்கையில் இருந்து 50ற்கும் மேற்பட்டவர்கள் தமிழகம் வந்துள்ளனர். ஒரே நாளில் 5 குடும்பத்தை சேர்ந்த 18 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ள நிலையில், அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகம் வந்துள்ள அவர்கள் தங்கள் வாழ்வை குறித்து கண்ணீர் வடிக்கின்றனர். மேலும் பலர் அகதிகளாக தமிழகத்திற்கு வரவுள்ளதாகவும் கூறுகின்றனர்.

இந்த நிலையில் மனிதநேய அடிப்படையில் தஞ்சம் தேடி தமிழ்நாட்டிற்கு வரும் இலங்கைத் தமிழர்களை அகதிகளாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று  பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து கருத்து கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், மனிதநேய அடிப்படையில் தஞ்சம் தேடி தமிழ்நாட்டிற்கு வரும் இலங்கைத் தமிழர்களை அகதிகளாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். சட்டப்பூர்வ உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். வாழ வழியின்றி வந்தவர்களை அகதிகளாக அறிவிக்காமல், சட்டவிரோத குடியேறிகளாகவே வைத்திருப்பது இந்தியா போன்ற, பன்னாட்டு அரங்கில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் நாட்டுக்கு அழகல்ல என்று தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!