இலங்கை கடற்படை 2 ஆயிரம் கோடி ஐஸ் ரக போதைப் பொருள் .! பின்னணியில் பாகிஸ்தான் இருக்குமா? தொடர் விசாரணை.!!

By Thiraviaraj RMFirst Published Apr 2, 2020, 9:45 AM IST
Highlights

இலங்கை வரலாற்றில் முதன் முதலாக 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்திருக்கிறது.கொரோனா வைரஸ் தாக்குதலால் காரணமாக மிகப் பெரிய அளவில் போதைப் பொருளை பாகிஸ்தானுக்கு கடத்த இருந்தவர்களை கைது செய்திருக்கிறது இலங்கை கடற்படை போ

T.Balamurukan

இலங்கை வரலாற்றில் முதன் முதலாக 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்திருக்கிறது.கொரோனா வைரஸ் தாக்குதலால் காரணமாக மிகப் பெரிய அளவில் போதைப் பொருளை பாகிஸ்தானுக்கு கடத்த இருந்தவர்களை கைது செய்திருக்கிறது இலங்கை கடற்படை போலீஸ். இதுகுறித்து இலங்கையில் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடல்வழியாக இலங்கைக்கு கப்பலில் கடத்தப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. போதைப் பொருட்களை கடத்தியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த 9 பேரை கைது செய்து இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இலங்கை வரலாற்றில் முதல்முறையாக ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கப்பலில் இருந்து 500 கிலோ ஐஸ் ரக போதைப்பொருள், 500 கிலோ கொக்கெயினை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!