அதிமுகவை உடைச்சவங்க உருப்பட்டதில்ல ! ஓபிஎஸ் சாபம் !!

Published : May 03, 2019, 07:58 AM IST
அதிமுகவை உடைச்சவங்க உருப்பட்டதில்ல ! ஓபிஎஸ் சாபம் !!

சுருக்கம்

அதிமுகவில் இருந்து பிரிந்து, கட்சி ஆரம்பித்தவர்களும், அதிமுகவை உடைத்தவர்களும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை என  துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சாபம் விட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதி, அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து, சிலைமான் பகுதியில்  துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பேசினார். அப்போது , ஜெயலலிதா ஆட்சி காலத்தில், மக்களுக்காக, தொலை நோக்கு திட்டங்களை செயல்படுத்தினார். அவற்றின் பலன்கள், தற்போது மக்களை சென்றடைந்துள்ளது. எதிர்கால சந்ததியினருக்கும் சென்றடைய உள்ளது. 

அவற்றுடன் சேர்த்து, ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  தலைமையிலான அரசு நிறைவேற்றி வருகிறது.சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக உள்ள ஒரே மாநிலம், தமிழகம் மட்டும் தான். 

32 ஆண்டு காலம், ஜெயலலிதாவுடன் கூடவே இருந்து, அவரை காப்பாற்ற முடியாத பாவிகள், தற்போது, அதிமுகவை அழிக்க வேண்டும் என, தனியாக இயக்கத்தை தொடங்கி உள்ளனர். 

அதிமுகவில் இருந்து பிரிந்து, கட்சி தொடங்கிய யாரும் இது வரை உருப்பட்டதாக சரித்திரம் இல்லை என குறிப்பிட்டார்.

தேர்தலுக்கு பின், அ.தி.மு.க., காணாமல் போய்விடும் என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் அதிமுக என்பது தமிழகம் முழுவதும் பரந்து,விரிந்து வளர்ந்துள்ள ஒர பெரிய ஆலமரம். அநத் இயக்கத்தை அதிமுக தொண்டர்கள், மக்கள் காத்து வருகின்றனர் என ஓபிஎஸ் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

அன்புமணிக்கு பாமகவில் ஒரு துளியும் உரிமை இல்லை..! நோட்டீஸ் விட்ட ராமதாஸ்..!
கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!