
இந்த தேசத்தில்தான் ஆன்மீகமும், அரசியலும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாததாக கலந்துகிடக்கிறது. ரஜினி கூட ‘ஆன்மீக அரசியல்’ தருவேன் என்றிருக்கிறார். ஆன்மீகமும் அரசியலும் மட்டுமல்ல ஆன்மீக குருமார்களும், அரசியலும் அதே ரீதியில்தான் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.
அந்த வகையில் சத்குரு ஜக்கிவாசுதேவ் விடம் ‘நீங்கள் ஏன் அரசியலில் நுழையக்கூடாது? உங்களைப் போன்ற தலைவரைத்தான் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்!” என்று கேட்டதற்கு ....
“நாட்டில் உள்ள மக்கள் எல்லாருமே அரசியலுக்குள்ளே போக முடியாது. ஆனா எல்லாரும் ஆன்மீகத்துக்குள்ளே போக முடியும்.
மக்கள் என்ன வேலையில இருந்தாலும் சரி, அரசியல்லயே இருந்தாலும் சரி ஆன்மீகத்தை தொடணும் அப்படிங்கிறது என் ஆசை. அரசியல்ல இருக்கிறவங்க ஆன்மீகத்துக்கு வந்தா நல்லது, அரசாங்கம் நல்லா நடக்கும், மக்களுக்கான நன்மை நடக்கும். ஆனால் ஆன்மீகத்துல இருக்கிறவங்க அரசியலுக்குள்ளே போக வேண்டிய சூழ்நிலை இன்னும் வரலை.
அதனால நான் அரசியலுக்கு போக வேண்டிய தேவை என்ன இருக்குது?” என்று கேட்கிறார்.
தான் அரசியலுக்கு வர தேவையில்லை எனும் நோக்கில் சத்குரு சொன்ன இந்த வார்த்தைகளை, ‘ஆன்மீகத்தில் இருக்கும் ரஜினி அரசியலுக்கு வர தேவையில்லை எனும் கோணத்தில் மறைமுகமாக பேசியிருக்கிறார் ஜக்கி.’ என சில குறும்பர்கள் கொளுத்திப் போட்டுள்ளனர்.
ம்ம்ம்முடியலை!