ஓபிஎஸ்-இபிஎஸ் அணியிலிருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ தினகரனுக்கு ஆதரவு..?

 
Published : Jan 02, 2018, 05:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
ஓபிஎஸ்-இபிஎஸ் அணியிலிருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ தினகரனுக்கு ஆதரவு..?

சுருக்கம்

admk mla support to dinakaran

தினகரனுக்கு ஏற்கனவே 18 எம்.எல்.ஏக்கள் ஆதரவாக உள்ள நிலையில், கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் தினகரனை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் குழப்பங்களும் மாற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன. பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இணைந்து தினகரனை ஓரங்கட்டிய பிறகு, வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் தினகரன் பக்கம் வந்தனர்.

முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததன் காரணமாக, அவர்கள் 18 பேரையும் சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். 

இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் தினகரன் வெற்றி பெற்றார். ஆளுங்கட்சியான அதிமுகவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வீழ்த்தினார். இதையடுத்து மேலும் பல எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் தினகரன் பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் கலக்கமடைந்த பழனிசாமியும் பன்னீர்செல்வமும் தினகரனின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி வருகின்றனர்.

வரும் 8ம் தேதி சட்டசபை கூட உள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் தினகரன் பக்கம் சென்றுவிடாமல் தடுக்கும் வகையில், நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் தினகரனை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் ஆட்சியாளர்கள் மத்தியில் கலக்கத்தை அதிகப்படுத்தியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யை சீண்டாதீங்க.. பாஜகவினருக்கு டெல்லி கொடுத்த 'சைலண்ட்' வார்னிங்.. மாஸ்டர் பிளான்!
‘டோ ஷூட் நடத்தும் முதல்வரை வீட்டுக்கு அனுப்புவோம்…’ எம்.ஜி.ஆர் சமாதியில் இபிஎஸ் சபதம்