
தினகரனின் பிரமாண்ட வெற்றிக்குப் பின் கிருஷ்ண ராயபுரம் தொகுதி MLA இன்று தினகரனை சந்திக்கவுள்ளதை தொடர்ந்து மீண்டும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக உள்ள நிர்வாகிகளை கட்சி தலைமை நீக்கி வருகின்றனர் எடப்பாடி அண்ட் பன்னீர்செல்வம்.
ஸ்லீப்பர் செல்ஸ் என தினகரனால் சொல்லப்பட்டு அவரது ஆதரவாளர்களான 150க்கும் மேற்பட்ட கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று தினகரனின் ஆதரவாளர்கள் மேலும் 9 பேரை கட்சி பொறுப்பிலிருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இதுதொடர்பாக கட்சி தலைமை விடுத்துள்ள அறிக்கையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் 9 பேர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தினகரனுக்கு நாளுக்கு அதிமுகவில் வலுக்கும் ஆதரவையடுத்து MLA & அமைச்சர்கள் சிலர் தினகரனை சந்திக்கவுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், கிருஷ்ண ராயபுரம் தொகுதி MLA கீதா இன்று தினகரனை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்திருந்தது.