கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக எவ்வளவு செலவு செய்தது தெரியுமா? அடேங்கப்பா !! இவ்வளவா ? கேட்டா  மலைச்சுப் போயிடுவீங்க…

First Published May 22, 2018, 6:07 AM IST
Highlights
spent 6 500 crores in karnataka elections


அண்மையில் கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக கட்சியின் சார்பில் 6500 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடகாவில் கடந்த 12 ஆம் தேதி 222 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 15 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆனால் கர்நாடக சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைக்க யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.  அதே நேரத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக, ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. 

இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவிற்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் அளித்தது. இதனை எதிர்த்து காங்கிரஸ் - மஜத கூட்டணி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. 

இந்த வழக்கை விசாரித்த  நீதிபதிகள் , 2 நாட்களில் சட்டசபையில் வெளிப்படையாக பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவிற்கு உத்தரவிட்டது. ஆனால் நிரூபிக்க முடியாத எடியூரப்பா ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் - மஜத கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதையடுத்து நாளை குமாரசாமி கர்நாடக முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொள்கிறார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் குறித்து  செய்தியாளர்களிடம் பேசிய  முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, , கர்நாடகாவில் ஜனநாயகத்தை பிளவுப்படுத்த பாஜக பெரும் முயற்சி செய்ததாகவும், ஆனால் அது  தோற்கடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். பணத்தை தண்ணீராக வாரி இறைத்து அதிகாரத்துக்கு வர துடித்ததாகவும் வேர் குறிப்பிட்டார்.

கர்நாடக தேர்தலுக்காக பாஜக  சார்பில்  6,500 கோடி  ரூபாய் செலவிட்டுள்ளது என்றும்  பாஜக நடந்து கொண்ட விதத்திற்கு  அவர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆனந்த் சர்மா வலியுறுத்தியுள்ளார். 

click me!