அதிமுக ஆட்சியில் விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகளை நீக்கி வெளியிட்டதை போல் கேரளா ஸ்டோரி படத்திற்கு திமுக அரசு செய்ய வேண்டும் என எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி உள்ளார்.
சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தி கேரளா ஸ்டோரிஸ். கேரளாவை சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்து அவர்களை மதமாற்றம் செய்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்த்து விடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் இது உண்மை கதை என்றும் விளம்பரம் செய்திருந்தனர்.
இந்தியில் உருவானப் படத்தை தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து கடந்த மே ஐந்தாம் தேதி ரிலீஸ் செய்தனர். கேரளாவில் ரிலீசுக்கு முன்பே படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரள முதல்வர் பினராய் விஜயன் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இத்தனை எதிர்ப்புகளையும் மீறி வெளியான படம் ரிலீசுக்கு பின்பும் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.
undefined
இதையும் படியுங்கள்... ‘பூனைக்குட்டி வெளியே வந்தது’ சபரீசனை சந்தித்த ஓபிஎஸ்... வச்சு செய்த ஜெயக்குமார் - வைரலாகும் டுவிட்
அதன்படி தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, நேற்று கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது கேரளா ஸ்டோரி படத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகளை நீக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். எந்த திரைப்படமும் எந்த மதத்தையும் புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
கடந்த அதிமுக ஆட்சியில் விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகளை நீக்கி வெளியிட்டதை சுட்டிக்காட்டிய அவர், அதேபோல் கேரளா ஸ்டோரி படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சியையும் நீக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கேரளா ஸ்டோரிஸ் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஈபிஎஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு! சொத்து மதிப்பை குறைத்துக் கூறியது தொடர்பான வழக்கில் நடவடிக்கை