‘பூனைக்குட்டி வெளியே வந்தது’ சபரீசனை சந்தித்த ஓபிஎஸ்... வச்சு செய்த ஜெயக்குமார் - வைரலாகும் டுவிட்

By Ganesh A  |  First Published May 7, 2023, 9:05 AM IST

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியை காண வந்த ஓபிஎஸ், சபரீசன் உடன் சந்திப்பு மேற்கொண்டதை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.


ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் நேற்று மோதியது. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 13 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் நடந்த போட்டியில் மும்பையை சென்னை அணி வீழ்த்தி உள்ளது. இந்த போட்டியை காண தனுஷ், நயன்தாரா, விக்னேஷ் சிவன், அனிருத், லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின் உள்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் வந்திருந்தனர். 

அதேபோல் அதிமுக-வை சேர்ந்த ஓ பன்னீர்செல்வமும் வந்திருந்தார். அவர் இந்தப் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள கருணாநிதி ஸ்டாண்டில் அமர்ந்து பார்த்தார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதைப் போல் அவரின் மற்றொரு புகைப்படம் அரசியல் வட்டாரத்தை அதிரச் செய்தது. அது என்னவென்றால் அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசனை சந்தித்து பேசிய புகைப்படம் தான்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.!!

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஓபிஎஸ் திமுக-வுக்கு தாவ உள்ளாரா என கேள்வி எழுப்பி வந்தனர். ஏற்கனவே அதிமுக-வின் தனி அணியாக பிரிந்து செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், திடீரென சபரீசனை சந்தித்து பேசியது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆனது.

பூனைக்குட்டி வெளியே வந்தது...

*சபரீசனுடன் ஓ.பி.எஸ் சந்திப்பு..* pic.twitter.com/MjDhDPKkpR

— DJayakumar (@offiofDJ)

எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் விதமாக முன்னாள் அதிமுக அமைச்சரும், ஈபிஎஸ் அணியை சேர்ந்தவருமான ஜெயக்குமார், ஓபிஎஸ்-ஐ விமர்சித்து டுவிட் ஒன்றை போட்டுள்ளார். அதில் ஓபிஎஸ் சபரீசனை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, ‘பூனைக்குட்டி வெளியே வந்தது’ என குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... தேர்தலில் கொடுத்த வாக்குறுதியான 'வேளாண்மைக்கு தனி பட்ஜெட்' சாத்தியமானது திமுக ஆட்சியில்!!

click me!