எஸ் பி வேலுமணி வீட்டில் ரெய்டு.. எதிர்ப்பு தெரிவித்த 7 அதிமுக எம்எல்ஏக்கள் குண்டுகட்டாக கைது

By Ajmal KhanFirst Published Sep 13, 2022, 10:45 AM IST
Highlights

கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள் 7 பேரை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.

எஸ்.பி வேலுமணி வீட்டில் சோதனை

கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டம் தொடர்பான ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இரண்டு முறை சோதனை நடத்தப்பட்ட நிலையில் , மூன்றாவது முறையாக இந்த சோதனையானது இன்று காலை முதல் நடத்தப்படுகின்றது, இந்த சோதனை தகவலால் அதிர்ச்சி அடைந்த எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் எஸ்.பி.வேலுமணி வீடு முன்பு குவிந்துள்ளனர்.

சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்..! ஆ ராசாவை சிறையில் அடைக்க வேண்டும்..! இறங்கி அடிக்கும் பாஜக

கோவையில் உள்ள எஸ்பி வேலுமணியின் நண்பரான சந்திரசேகரன் வீடு உள்ளிட்ட  26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை குனியமுத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இல்லம்


தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் வெளியீட்டாளர்  சந்திரசேகர் இல்லம்

பி.என்.புதூரில் உள்ள சந்திரசேகரன்  அப்பா ராஜூ இல்லம்

வடவள்ளியில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நண்பர் சீனிவாசன் என்பவரது இல்லம்

வடவள்ளியில் உள்ள சி.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் அலுவலகம்

அன்னூர் சத்தி சாலையில்  உள்ள ஏஷ் டெக் மிஷினரி இந்தியா பிரைவேட் லிமிடெட் அலுவலகம்

பீளமேடு கே.சி.பி அலுவலகம்

கொடிசியா அருகே கே.சி.பி நிர்வாக இயக்குனர் சந்திரபிரகாஷ் இல்லம்

பீளமேடு அண்ணா நகரில் உள்ள சபரி எலக்ட்ரானிக்ஸ் நிறுவன உரிமையாளர் குமரேசன் இல்லம்

இந்தநிலையில்  லஞ்ச ஒழிப்புதுறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 
அம்மன் அர்ச்சுணன் , பி.ஆர்.ஜி அருண்குமார் , தாமோதரன் , கந்தசாமி , அமுல்கந்தசாமி , கே.ஆர்.ஜெயராம் , ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் போலீசார் குண்டுகட்டாக கைது செய்துள்ளனர். இதே போல போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதன் காரணமாக அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்..! ஆ ராசாவை சிறையில் அடைக்க வேண்டும்..! இறங்கி அடிக்கும் பாஜக

click me!