சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்..! ஆ ராசாவை சிறையில் அடைக்க வேண்டும்..! இறங்கி அடிக்கும் பாஜக

By Ajmal Khan  |  First Published Sep 13, 2022, 10:21 AM IST

மத துவேஷத்தை யார் செய்தாலும் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறிய தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அ.ராசாவை கைது செய்து சிறையிலடைக்க  உரிய நடவடிக்கை எடுத்து தான் சொன்னதை, தன் கடமையை செய்வாரா? என பாஜக மாநில துணை தலைவர் நாரயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.


ஆ ராசா பேச்சுக்கு பாஜக கண்டனம்

முன்னாள் அமைச்சரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தனது ஆவசேமான பேச்சுக்கள் மூலமாக அனைவரையும் தன் வசம் ஈர்க்க கூடியவர் அப்படிபட்டவர் சில நேரங்களில் சர்ச்சை பேச்சுகளில் சிக்கி பரபரப்பை உண்டாக்குவார். அப்படி இந்துக்களை விமர்சித்து பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் பரவி கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக   பாஜக மாநில துணை தலைவர் நாரயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்;  சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக  இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற  அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது' என்று தி மு க வின்  துணை பொது செயலாளர் அ.ராசா பேசுகின்ற ஒரு காட்சியை 
பார்க்க நேர்ந்தது.  

Tap to resize

Latest Videos

தேனியில் நேருக்கு நேர் பைக் மோதி விபத்து...! ராணுவ வீரர் உள்ளிட்ட 3 பேர் துடி துடித்து பலி

இந்துக்களை விமர்சித்தாரா ஆ ராசா

இதை எப்போது பேசியிருந்தாலும் வன்மத்தை தூண்டுகிற மத துவேஷ பேச்சே. "எங்கள் கட்சியில் இருப்பவர்கள் 90 விழுக்காடு ஹிந்துக்கள் தான், அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஹிந்து மதத்தின் மீதும் கடவுளின் மீதும் நம்பிக்கை உள்ளது"என்றும்  சில ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல் நேரத்தில் தி மு க தலைவர் திரு.மு.க,ஸ்டாலின் அவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது. தி மு க தொண்டர்களின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்ல, திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்ப உறுப்பினர்களில்   குறிப்பாக, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உட்பட பலரும் கடவுள் மீதும் ஹிந்து மதத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளதோடு தொடர்ந்து பல கோவில்களுக்கு சென்று வழிபடுவதையும் நாம் பார்த்து வருகிறோம். 

'ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்(1/8)

— Narayanan Thirupathy (@Narayanan3)

 

ஆ ராசாவை கைது செய்வாரா முதலமைச்சர்

மு க ஸ்டாலின் அவர்களுக்கு நம் ஒரே கேள்வி - அ.ராசாவின் கேள்விகள் பொதுமக்களுக்கானது என்றால், மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் பேசிய அவர் மீது மத துவேஷத்தை யார் செய்தாலும் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறிய தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அ.ராசாவை கைது செய்து சிறையிலடைக்க  உரிய நடவடிக்கை எடுத்து தான் சொன்னதை, தன் கடமையை செய்வாரா? அல்லது விடுதலை மற்றும் முரசொலியை குறிப்பிட்டு பேசியுள்ளதால், அ.ராசாவின் கேள்விகள் தி மு க தொண்டர்களின் குடும்பத்தினருக்கும், தி மு க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தினருக்கும் என்றால், சொந்த கட்சி தொண்டர்களின் குடும்பத்தினர் மற்றும் தலைவரின் குடும்பத்தினரை இழிவுபடுத்தியதற்கு, தி மு கவிலிருந்து நீக்குவாரா? பொது மக்களா? குடும்பமா? எதுவாகினும் உரிய நடவடிக்கை எடுப்பாரா மு.க.ஸ்டாலின் அவர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள்

அதிமுக ஆட்சியை காப்பாற்ற எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியது ஏன்..? சசிகலா கூறிய ரகசிய தகவல்

 

click me!