நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் நடப்பவை நல்லவையாகவே இருக்கட்டும் அண்ணா காட்டிய வழியில் கழகத்தினர் அனைவரும் ஒற்றுமையோடு பயணிப்போம் என சசிகலா கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்களை ஏமாற்றிய திமுக
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக ஓபிஎஸ்- சசிகலா- இபிஎஸ் என 3 பிரிவாக பிளவு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி சொந்த மாவட்டமான சேலத்தில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சாமானிய மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள்.பள்ளி மாணவர்களை கருத்தில் கொண்டு சத்துணவு திட்டத்தை மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் கொண்டு வந்தார். தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி என ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினார். ஆனால் திமுக அரசு அந்த திட்டங்களுக்கெல்லாம் மூடு விழா நடத்திக் கொண்டு வருகிறது. இதனை எந்த மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஓட்டு போட்ட மக்களுக்கு திமுக செய்யும் அநீதி எனவும் தெரிவித்தார். திமுகவினர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார்கள் 505 வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றி உள்ளார்கள் என்பதை யாருக்கும் தெரியாது எனவும் விமர்சித்தார்.
ஒன்றுபடுவதை தடுக்க முடியாது
ஏழை,எளிய மக்களின் நம்பிக்கை கூறிய இயக்கமாக அதிமுக இருந்துள்ளது. எத்தனையோ கழகத் தொண்டர்கள் தங்களது இன்னுயிரை தியாகம் செய்து அதிமுகவை வளர்த்துள்ளனர். அதிமுகவை ஆட்சி கட்டிலில் அமரவைத்துள்ளனர். அவர்களின் தியாகங்களுக்கு மதிப்பளித்திருந்த வகையில் நமது ஒவ்வொருவரின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். எந்தவித வேற்றுமைகள் இருந்தாலும் அவற்றை கண்டிப்பாக சரி செய்து எல்லோரையும் அரவணைத்து வலிமைமிக்க இயக்கமாக மாற்றாமல் ஓயப்போவதில்லை எனவும் கூறினார். இது நடந்தே தீரும் என உறுதிப்பட சசிகலா தெரிவித்தார். எதிரிகள் எந்த சூழ்ச்சிகள் மேற்கொண்டாலும் நம் இயக்கம் ஒன்றுபடுவதை யாராலும் தடுக்க முடியாது. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு நமது இயக்கம் சந்தித்த சோதனைகளை அனைவரும் அறிந்ததே அதன்பிறவுக்கு அனைவரையும் அரவணைத்து ஒரே குடையின் கீழ் சிறப்பான ஆட்சியையும் மேற்கொள்ளப்பட்டது. எந்த ஒரு இயக்கமும் இது போன்ற சோதனையை சந்தித்து மீண்டதாக வரலாறு எதுவும் இல்லை.
இபிஎஸ்சை முதலமைச்சராக்கியது ஏன்?
நம்மால் அனைத்தையும் முறியடித்து அப்போது பெற்ற வெற்றியை போல் மீண்டும் வெற்றி பெறுவோம். அன்று எப்படி சாத்தியமானது என்பதை அனைவரும் ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால் இன்றைய பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும். இயக்கத்தின் நலன் கருதி ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக ஒன்றிணைவோம் எதிரிகளை வென்றிடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக வையும் கொங்கு நாட்டு மக்களையும் யாராலும் பிரித்துப் பார்க்க முடியாது. இது இன்று நேற்று வந்த பந்தமில்லை மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் காலம் தொட்டே இருந்து வருகிறது. இதன் காரணமாகத்தான் கொங்கு மக்களுக்கு நாங்கள் உரிய அங்கீகாரத்தை வழங்கி வருகிறோம். இதனை மனதில் வைத்து தான் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஆட்சியை காப்பாற்ற வேண்டிய நெருக்கடியான காலகட்டத்தில் உங்கள் பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகியை (எடப்பாடி பழனிசாமியை) முதலமைச்சராக தேர்வு செய்தேன். எனவே எந்தவித பிரதிபலன் எதிர்பார்க்காமல் இயக்கத்தின் நலனை கருதியே எனது பங்களிப்பை அழித்து இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு.. என்ன காரணம் தெரியுமா? எஃப்ஐஆரில் பரபரப்பு தகவல்.!
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்
சோதனைகள் ஏற்பட்டாலும் அதனை எல்லாம் முறியடித்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் கழகத்தை வலிமைப்படுத்தி யாராலும் அசைத்து பார்க்க முடியாத பேரியக்கமாக மீண்டும் கொண்டு வருவோம். இதனை அனைவரும் பார்க்கத் தான் போகிறீர்கள். கழக நிர்வாகிகள் தற்போது உள்ள எதார்த்த நிலையை புரிந்து கொண்டு ஒன்று சேர்ந்தால் கண்டிப்பாக நம்மால் வெற்றியை பெற முடியும். தமிழக மக்களின் ஆதரவை பெற்று ஆட்சியையும் அமைத்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களை நிறைவேற்றிட முடியும் எனவும் கூறினார். தொண்டர்களின் நலன் கருதி அனைவரையும் அரவணைத்து இயக்கத்தை வலிமைப்படுத்துவதே இன்றைய மிகவும் அவசியமானது. இதுவும் அனைவருடைய எண்ணமாகவும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். எனவே நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் நடப்பவை நல்லவையாகவே இருக்கட்டும் அண்ணா காட்டிய வழியில் கழகத்தினர் அனைவரும் ஒற்றுமையோடு பயணிப்போம் என ச்சிகலா தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்