அப்படியே ஊழலை ஒழிக்கிற உத்தம மாதிரி மேடைக்கு மேடைக்கு பேசினீங்க.. என்ன ஆச்சு? ஆளுங்கட்சியை அலறவிடும் TTV.!

Published : Jun 28, 2022, 07:04 AM ISTUpdated : Jun 28, 2022, 07:06 AM IST
அப்படியே ஊழலை ஒழிக்கிற உத்தம மாதிரி மேடைக்கு மேடைக்கு பேசினீங்க.. என்ன ஆச்சு? ஆளுங்கட்சியை அலறவிடும் TTV.!

சுருக்கம்

பழனிசாமி கம்பெனியோடு முன்பு போட்டுக்கொண்டதாக சொல்லப்பட்ட 60:40 ஒப்பந்தம், நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கிறதா? இன்னும் எத்தனைக் காலத்திற்கு இப்படி கூட்டு சேர்ந்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்? என்று டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் புகாரில் அதிகாரிகள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பது மக்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான மாநகராட்சிகள் டெண்டர் முறைகேட்டில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 12 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கேட்டு, தமிழக அரசுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுமதி வழங்காமல் திமுக அரசு 8 மாதங்களாக இழுத்தடிப்பது மக்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- ஓபிஎஸ்-க்கு அன்று நல்ல நேரம்... இல்லனா வேற மாதிரி போயிருக்கும்.. ஆதங்கம் படும் டிடிவி. தினகரன்..!

இதையும் படிங்க;- எஸ்.பி.வேலுமணிக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்..!

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் புகாரில் தொடர்புடைய 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுமதி வழங்காமல் திமுக அரசு 8 மாதங்களாக இழுத்தடிப்பது மக்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;-  பாயிண்டை பிடித்த புகழேந்தி.. சி.வி.சண்முகத்தின் அடி மடியிலேயே கை வைத்ததால் அதிர்ச்சி..!

தேர்தலுக்கு முன்பு, 'ஊழலை ஒழிக்க வந்த உலக மகா உத்தமர் போல' மேடைக்கு மேடை பேசியதெல்லாம் முதல்வர் ஸ்டாலினுக்கு மறந்து போய்விட்டதா? ஊழல் செய்த அத்தனை பேரையும் தனி நீதிமன்றம் அமைத்து தண்டிக்கப் போவதாக வாய்ச்சவடால் விட்டவர்கள், விசாரணைக்கு அனுமதிக்கவே இவ்வளவு தயக்கம் காட்டுவது ஏன்?

 

 

பழனிசாமி கம்பெனியோடு முன்பு போட்டுக்கொண்டதாக சொல்லப்பட்ட 60:40 ஒப்பந்தம், நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கிறதா? இன்னும் எத்தனைக் காலத்திற்கு இப்படி கூட்டு சேர்ந்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்? என்று டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!