ஆட்டத்தை ஆரம்பித்த ஓபிஎஸ்.. எடப்பாடியாருக்கு எதிராக புதிய அஸ்திரம்..!

By vinoth kumar  |  First Published Jun 28, 2022, 6:29 AM IST

ஒற்றை தலைமை விவகாரம் மோதல் அதிமுகவில் உச்சமடைந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒற்றை தலைமை தான் வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுததியாக உள்ளார். ஆனால், இரட்டை தலைமை நீடிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறிவருகிறார். இந்நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் புகார் கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.


அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் கூட்டுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார்.

ஒற்றை தலைமை விவகாரம் மோதல் அதிமுகவில் உச்சமடைந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒற்றை தலைமை தான் வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுததியாக உள்ளார். ஆனால், இரட்டை தலைமை நீடிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறிவருகிறார். இந்நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் புகார் கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- எடப்பாடியாருக்கு அதிர்ச்சி கொடுத்த முன்னாள் சபாநாயகர் தனபால், கடம்பூர் ராஜூ..!

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கட்சியும் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் கட்சியின் பொதுச்செயலாளரோ, ஒருங்கிணைப்பாளரோ கட்சியின் நடவடிக்கை குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் அறிக்கை அளிக்க வேண்டும். அந்தவகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க;- இன்று நடைபெறும் அதிமுக கூட்டம் சட்டப்படி செல்லாது.. ஒரே அறிக்கையில் இபிஎஸ் முகாமை அலறவிடும் ஓபிஎஸ்..!

கடந்த 12ம் தேதி செப்டம்பர் மாதம் 2017ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கட்சியின் திருத்த சட்டப்படி ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது 5 ஆண்டுகளாகும். இந்த விதியின்படி தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளரை நீக்கவோ, விதிகளில் திருத்தம் செய்யவோ கட்சி தொண்டர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது. இந்நிலையில் கட்சி அலுவலக மேலாளர் மகாலிங்கம் வழியாக ஜூன் 22ல் பொதுக்குழு தீர்மானங்கள் எனக்கு வந்தது. இதில் 23 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை அங்கீகரிக்காததால் ஜூன் 23ல் நடந்த பொதுக்குழு செல்லாது. மேலும் அவைத்தலைவர் தேர்வும் செல்லாது. பொருளாளர் என்ற முறையில் கணக்கு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

இதையும் படிங்க;-  அதிமுகவை வழி நடத்த உண்மையில் யாருக்கு உரிமை.? 35 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். எழுதி வைத்த உயிலில் தீர்வு.!

மேலும் 26ம் தேதி இரவில் கட்சி தலைமையகம் பெயரில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது தொடர்பாக அறிக்கை வெளியானது. இதில் எந்த கையெழுத்து இடம்பெறவில்லை. தலைமை அலுவலக செயலாளர் பெயரில் வெளியாகி இருந்தது. ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் அனுமதியில்லை. மேலும் ஜூலை 11ம் தேதிக்கான பொதுக்குழு அறிவிப்பும் உரிய முறையில் கூட்டப்படவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஏற்கனவே அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!