மழை நிற்கட்டும்! வெள்ளம் வடியட்டும் என்று காத்திராமல் களத்தில் இறங்குங்கள் தொண்டர்களே! கிருஷ்ணசாமி உத்தரவு!

By vinoth kumar  |  First Published Dec 19, 2023, 8:08 AM IST

திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் வாழ்ந்துகொண்டிருக்கக்கூடிய மக்களை அப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்து, வீட்டைவிட்டு வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்படுவதற்கு முன்பாக, அவர்களை மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றிட வேண்டும்.


தென்மாவட்டங்களில் அபரிமிதமான மழை – வெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு உதவிட புதிய தமிழகம் கட்சியினர் உடனடியாக நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என கிருஷ்ணசாமி உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த 2 நாட்களாக, தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த அபரிமிதமான மழை - அதனால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக, குளங்கள், குட்டைகள், சாலைகள், பாலங்களில் உடைப்புகள் ஏற்பட்டும், ஆறு, ஓடை உள்ளிட்ட நீர்நிலைகளின் ஓரங்களில் வாழ்ந்த மக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தும் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். 

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இன்று வரை மழை தொடரும் என வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. எனவே இன்னும் கூடுதலாக மழையும் வெள்ளமும் ஏற்பட வாய்ப்புண்டு. மழை நிற்கட்டும், வெள்ளம் வடியட்டும் என்று காத்திராமல், புதிய தமிழகம் கட்சியின் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு உடனடியாகச் சென்று உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மிக முக்கியமாக கீழ்கண்ட வழிமுறைகளின்படி நிவாரணப்பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

இதையும் படிங்க;- திருநெல்வேலி, தூத்துக்குடி.. கனமழை எதிரொலி.. 25க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று ரத்து - தென்னக ரயில்வே!

*  திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் வாழ்ந்துகொண்டிருக்கக்கூடிய மக்களை அப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்து, வீட்டைவிட்டு வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்படுவதற்கு முன்பாக, அவர்களை மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றிட வேண்டும்; முதியோர்கள், குழந்தைகள், உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டோரை வாகனங்கள் இல்லாவிடினும், சுமந்து வந்தாவது பாதுகாப்பான இடங்களில் சேர்த்திட வேண்டும்.

* ஆடுகள், மாடுகள், கோழிகள் போன்ற கால்நடைகளையும் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சென்றிட வேண்டும்.

*  பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்குத் தேவைகளின் அடிப்படையில் உணவு, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். 

*  மருத்துவ உதவிகள் தேவைப்படுவோருக்கு முதலுதவிகளைச் செய்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். 

*  நிவாரண உதவிகள் தேவைப்படுவோருக்கு கஷ்டப்பட்டாவது ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும்.

*  வெள்ளப்பாதிப்புக்கு ஆளாகாத மாவட்டங்களின் நிர்வாகிகள் அனைவரும் மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களுக்கு உடனடியாக நிவாரணப்பணிகளை மேற்கொள்ளவும் உதவிகள் செய்திடவும் தயாராகச் செல்ல வேண்டும்.

*  நிவாரணப் பணிகளை நிறைவேற்றுவதற்கு நமது கட்சியின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கீழ்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.

click me!