அதிமுகவை சேர்ந்த 9 பேர் திமுகவில் அமைச்சர்கள்... நான் நினைத்திருந்தால் எப்பவோ அமைச்சராகியிருக்கலாம்- ஓபிஎஸ்

By Ajmal KhanFirst Published Dec 19, 2023, 7:50 AM IST
Highlights

நான் தனிக்கட்சி தொடங்க போவதாக செய்திகள் பரப்பப்படுகிறது. அது போன்ற எண்ணம் தனக்கு எப்போதும் இல்லை. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இண்டாம் தர்மயுத்தம்- ஓபிஎஸ்

அதிமுகவில் அதிகார மோதல் காரணமாக 4 பிளவுகளாக அதிமுக பிரிந்துள்ளது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தீவிரமாக களத்தில் செயல்பட்டு வருகிறார். இந்தநிலைஇல்  முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் நடைப்பெற்றது.அதிமுக பெயர் மற்றும் சின்னம் பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தற்போது இரண்டாம் தர்மயுத்தம் நடைப்பெற்று வருவதாகவும், கடந்த இரண்டு வருடமாக தொண்டர்கள் தூக்கமின்றி உள்ளார்கள், இந்த தர்மயுத்தத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என கூறினார்.  


தனி கட்சி தொடங்கப்போவதில்லை

நாம் பிரிந்து தனியாக இயங்கி வரும் இந்த வேளையில், நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ளோம்.  தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கான கட்டமைப்பு  ஏற்படுத்த வேண்டியது அவசியம். உருவாக்கியே தீர வேண்டிய நிலை வந்துள்ளது. வருவாய் மாவட்ட வாரியாக தனித்தனியாக ஆலோசனை நடத்தி நிர்வாகிகள் நியமித்துள்ளீர்களா என்பதை விசாரிக்க போகிறோம். மாவட்ட செயலாளர்கள் அதற்கான பதிலோடு தயாராக இருங்கள் என தெரிவித்தார். நான் தனிக்கட்சி தொடங்க போவதாக செய்திகள் பரப்பப்படுகிறது.

அது போன்ற எண்ணம் தனக்கு எப்போதும் இல்லை.  தனிக்கட்சி ஆரம்பித்தால் தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் தற்காலிகமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்கின்ற குழு தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிச்சயம் வழக்குகளில் வெற்றி பெற்று தொண்டர்களின் உரிமைகள் மீட்கப்படும் என கூறினார்.

திமுகவில் சேர்ந்து அமைச்சராகியிருப்பேன்

நான் திமுகவில் சேர்ந்து விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சிக்கிறார். அதிமுகவிலிருந்து விலகிச் சென்ற 9 பேர் தற்போது திமுகவில் அமைச்சர்களாக இருக்கின்றனர் நான் நினைத்திருந்தால் அவ்வாறு ஆகியிருக்க முடியும் ஆனால் என்றும் நான் ஜெயலலிதாவின் தொண்டன். ஜெயலலிதாவிடம் அரசியல் பாடம் படித்தவன் என பேசினார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீட்டெடுக்கவே அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடவுள்ளதாகவும், கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம் என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை.. காங்கிரசுக்கு அதிமுக கூட்டணி கதவு திறந்து இருக்கிறது- ஜெயக்குமார் அதிரடி

click me!