நடிகர் ரஜினிகாந்த் மகள் திருமணத்துக்கு நேரில் வாழ்த்த வரும் மோடி ? எப்போ தெரியுமா ?

Published : Dec 29, 2018, 04:09 PM IST
நடிகர் ரஜினிகாந்த் மகள் திருமணத்துக்கு நேரில் வாழ்த்த  வரும் மோடி ? எப்போ தெரியுமா ?

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தித்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் திருமணத்தில் நேரில் வந்து கலந்து கொண்டு வாழ்த்துவதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

ரஜினியின் இரண்டாவது மகளும், இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த், தொழிலதிபர் அஸ்வினை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்தார். அவர்களுக்கு வேத் கிருஷ்ணா என்ற ஒரு மகன் உள்ளார். பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரிந்துவிட்டனர்.அதனால் தன் மகனுடன் சௌந்தர்யா தனது தந்தை  வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவருக்கும் பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகனும் நடிகருமான விசாகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் திமுக எம்எல்ஏ பொன்முடியின் சகோதரர் தான் தொழிலதிபர் வணங்காமுடி. அவரது மகன் விசாகன் சமீபத்தில் வெளியான வஞ்சகர் உலகம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அமெரிக்காவில் எம்பிஏ படிப்பை முடித்து, தயாரிப்பு நிறுவனத்தை நடத்துகிறார் விசாகன். 

இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம்  செநந்தர்யாவின் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அதில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

தற்போது அமெரிக்கா  சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் 10 ஆம் தேதி சென்னை திரும்ப உள்ளதாகவும், அதன் பிறழ திருமண்ம் தேதியை அதிகாரப்பபூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி திருமணம் நடைபெறும என்றும். பிரதமர் மோடி அதில் கலந்து கொள்வார் என்றும் செய்திகள்  வலம் வருகின்றன.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!