தமிழக அரசின் புத்தாண்டு பரிசு என்ன தெரியுமா ? எடப்பாடி பழனிசாமியின் மெகா திட்டம் !!

Published : Dec 29, 2018, 01:52 PM IST
தமிழக அரசின் புத்தாண்டு பரிசு என்ன தெரியுமா ?  எடப்பாடி பழனிசாமியின் மெகா திட்டம் !!

சுருக்கம்

தமிழக அரசு மீதான  மக்களின் தொடர் வெறுப்பு, எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தல். 20  தொகுதி இடைத்தேர்தல் இவற்றை கணக்கில்  ஜனவரி 2 ஆம் தேதி  சட்டமன்றம் கூடும்போது தமிழக மக்களுக்கு பல பரிசுத் திட்டங்களை அறிவிக்க முதலமைச்சர் திட்டமட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அதிமுக ஆட்சி பாஜக நினைத்தபடி தான் நடைபெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ஜெயலலிதா  எதிர்த்த பல திட்டங்கள் தமிழகத்தில் மிக எளிதாக நிறைவேற்றப்பட்டது.

இதனால் தமிழக மக்கள் தொடர்ந்து அதிமுக ஆட்சி மேல் வெறுப்பைக் காட்டி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் தமிழக மக்களை கவரும் வகையில் பெரிய திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் தான் அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல்களை கணக்கில் கொண்டு  புதிய அறிவிப்புகளை வெளியிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறார்.

அதன்படி வரும் ஜனவரி 2 ஆம் தேதி 2019 ஆம் ஆண்டின் தமிழக சட்டமன்றக் கூட்டம் கூடுகிறது. அப்போது கவர்னர் உரையுடன்  கூட்டம் தொடங்குகிறது.  அவரது உரையில் பல புதிய கவர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

அதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்த  தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி. குடும்ப அட்டைதார்களுக்கு  இலவச செல்போன் ஆகிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.  

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!