தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தமிழிசை நீக்கமா? புதிய தலைவர் யார் தெரியுமா?

By sathish kFirst Published Dec 29, 2018, 12:48 PM IST
Highlights

மாநில பிஜேபி தலைவர் தமிழிசை மீது தலைமை அதிருப்தியாக  இருப்பதால்  தலைவர் பதவியிலிருந்து நீக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளு மன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகிக் கொண்டிருக்கிருக்கும் இந்த நேரத்தில், பாஜக தமிழகத்தில் தாமரையை மலரவைக்க அதிரடியான சில முடிவுகளை எடுக்க உள்ளதாம். அதில் முக்கியமான ஒன்று தமிழக பிஜேபி தலைவரான தமிழிசையை நீக்கிவிட்டு புதிய தலைவரை நியமிப்பது.

நாடாளு மன்ற தேர்தலுக்காக  சுற்றுப்பயணத்துக்கு தயாராகிவிட்டார் பிரதமர் மோடி. அதற்கு முன்பாக தமிழிசையை நீக்கிவிட்டு, அதிமுகவிலிருந்து, காங்கிரசுக்கு போய் அங்கு போனியாகாமல், பிஜேபியில் ஐக்கியமான எஸ்.வி. சேகர் நியமிக்கப்படலாம்  என தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்.கே நகர் தொகுதியில் பிஜேபி  நோட்டாவைவிட  மிகக் குறைந்த வாக்கு வாங்கியதால், பாஜக தலைவர் பதவியை தனக்கு கொடுத்தால், அதனை ஏற்கத்தயாராக இருப்பதாகவும், தமிழகத்தில் பாஜகவின் தற்போதைய ஓட்டு வங்கியை தன்னால் அதிகமாக்கி காட்ட முடியும்  எஸ்.வி. சேகர் சொல்லிவந்தது, தமிழிசையை டென்ஷானாக்கியது.

ஒட்டுமொத்த அரசியல் கட்சி தலைவர்களின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் ஒரே தலைவராக தமிழிசை இருந்து வருகிறார். சுப்பிரமணியசாமி, எச்.ராஜா, வானதி ஸ்ரீநிவாசன், நிர்மலா சீதாராமன், போன்.ராதாகிருஷ்ணன் போன்ற தலைவர்கள் இருந்தாலும் பிஜேபியை எதிர்க்கும் மொத்த அரசியல் கட்சிகளுக்கும், ஒரே எதிரி தமிழிசை தான்.

 தமிழக பாஜக தலைவராக தலைவரான நாள் முதல் இன்று வரை, ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், தினகரன் என தமிழக அரசியல் தலைவர்களை சமாளித்து நாங்களும் தமிழகத்தில் பெரிய கட்சி தான் என போராடிவருவது தமிழிசை தான். தமிழிசை இடத்தில் எஸ்.வி.சேகர் ஒரு நாள் கூட இருந்து சமாளிக்க முடியாது என்பது அவருக்கே தெரியும்.

click me!