​விரைவில் இடைத்தேர்தல்..? பின் வாங்கிய அதிமுக எம்.பி.,க்கள்..!

Published : May 10, 2021, 04:24 PM ISTUpdated : May 10, 2021, 05:44 PM IST
​விரைவில் இடைத்தேர்தல்..? பின் வாங்கிய அதிமுக எம்.பி.,க்கள்..!

சுருக்கம்

இதனால், இரு தொகுதிகளுக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறாது.

அதிமுகவில் ஓ.பி.எஸின் ஆதரவாளர்  கிருஷ்ணகிரியை சேர்ந்த முனுசாமி, வெற்றி பெற்றும் பலனில்லாமல் போனது. நாடாளுமன்றத் தேர்தலில் சீட்டு வாங்கி போட்டியிட்டவருக்கு தோல்வியே பரிசாக கிடைத்தது. இதனால் வம்படியாக மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வாங்கினார். பிறகு மாநில அரசியலில் அதிகாரம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், சட்டமன்றத்துக்கு சீட்டு வாங்கி போட்டியிட்டார்.

ப வைட்டமினை தண்ணியாக இறைத்து வெற்றி பெற்றார். ஆனால் தேர்தல் முடிவுகள், மாநிலம் முழுவதும் அதிமுகவுக்கு சாதகமாக இல்லை. இதனால் விரக்தியான அவர் இப்போது மாநிலங்களவைக்கு போகலாமா? அல்லது மாநிலத்திலேயே இருக்கலாமா என்று தீவிர ஆலோசனையில் இருந்தார்.  மாநிலத்தில் ரூலிங் பார்ட்டியாக இருந்தால்தான் கெத்து. ஆனால், இப்போது அந்த நிலையில் அதிமுக இல்லை. அதனால் மாநிலத்தை விட, மாநிலங்கள் அவையைத்தான் அவர் விரும்புவதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் இவர் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை உதறித் தள்ளி இருக்கிறார். அதேபோல ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட வைத்திலிங்கமும் தனது மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், இரு தொகுதிகளுக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறாது.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!