திமுக, அதிமுகவுக்கு டஃப் கொடுத்த சுயேச்சை வேட்பாளர்.. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழப்பு..!

Published : May 10, 2021, 03:21 PM IST
திமுக, அதிமுகவுக்கு டஃப் கொடுத்த சுயேச்சை வேட்பாளர்.. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழப்பு..!

சுருக்கம்

சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட பாலகிருஷ்ணன் கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட பாலகிருஷ்ணன் கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை சுனாமி வேகத்தில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் தாக்கம் கொஞ்சம் கூட குறையவில்லை. தினசரி பாதிப்பு 29,000ஐ நெருங்கி வருகிறது. ஆகையால், வேறு வழியில்லாமல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம், சாந்தாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வி.பாலகிருஷ்ணன் (60). இவர் தமிழகத்தில் நடந்து முடிந்த 16வது சட்டப்பேரவை தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டி மூன்றாவது இடத்தை பிடித்தார். இந்த தொகுதியில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட பின்னுக்கு தள்ளினார். 

இந்நிலையில், பாலகிருஷ்ணனுக்கு கடந்த சனிக்கிழமை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையத்து, அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு தொற்று உறுதியானதையடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாகமாக பாலகிருஷ்ணன் உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு கிராமத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?
vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!