எதிர்கட்சி தலைவரானார் இபிஎஸ்.. சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வேலுமணி, தங்கமணி கடிதம்.

By Ezhilarasan BabuFirst Published May 10, 2021, 2:21 PM IST
Highlights

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 67 இடங்களில் வெற்றி பெற்றது, சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்துள்ளது. அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்யும் எம்எல்ஏக்கள் கூட்டம் கடந்த 7ஆம் தேதி மாலை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 

எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, தங்கமணி வழங்கினர். 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 67 இடங்களில் வெற்றி பெற்றது, சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்துள்ளது. அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்யும் எம்எல்ஏக்கள் கூட்டம் கடந்த 7ஆம் தேதி மாலை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், தங்கமணி, ஜெயக்குமார், முனுசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற தொகுதி தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டது. 

கட்சி அலுவலகத்துக்கு வெளியே ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கட்சிக்கு ஒற்றைத் தலைமையே தேவை என்று முழங்கினர். அதிமுக தோல்விக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என்றும், தென்மாவட்டத்தில் அதிமுக தோற்க காரணம் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய இபிஎஸ் தான் காரணம் எனவும் இரு தரப்புக்கும் இடையே கடுமையான கருத்து மோதல் இருந்து வந்தது. இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் மே 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது, ஊரடங்கு தொடங்கியுள்ள நிலையில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்த சென்னை மாநகர  காவல்துறையிடம் அதிமுகவினர் அனுமதி பெற்றனர்.இந்நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலையில் துவங்கி சுமார் 3மணி நேரம் நடைபெற்றது. 

கூட்டத்தின் முடிவில் எடப்பாடி கே. பழனிச்சாமி தேர்வுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கட்சி தலைமையகம் முன்பாக எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களும் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் பெருமளவில் குவிந்திருந்தனர். எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்வுசெய்ய வெள்ளிக்கிழமையன்று நடந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டிருக்கிறது. தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, தங்கமணி ஆகியோர் வழங்கினர்.  

 

click me!