சோனியா கட்டளை.. பாஜகவுக்கு எதிராக களத்தில் இறங்கும் திமுக, கூட்டணி கட்சிகள்.. துரைமுருகன் பரபரப்பு அறிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Sep 17, 2021, 11:45 AM IST
Highlights

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அம்மையார் அவர்கள் தலைமையில் 20- 8-2021 அன்று நடைபெற்ற இந்திய அளவிலான எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற காணொளி கூட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்வது, விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், 

மக்கள் விரோத ஜனநாயக விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து 20-9 -2021 திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் கண்டன போராட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அம்மையார் அவர்கள் தலைமையில் 20- 8-2021 அன்று நடைபெற்ற இந்திய அளவிலான எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற காணொளி கூட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்வது, விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலையில்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பிகாசஸ் ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட  ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து, நாடு முழுவதும் செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. 

அதன்படி ஒன்றிய பாஜக அரசின் செயல்களை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் மாநிலம் முழுவதும் 20-9-2021 திங்கட்கிழமை அன்று காலை 10 மணி அளவில் தங்களின் இல்லம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என கழகத் தலைவர் தளபதி மு.க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைமையிலான அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் விடுத்த அறிக்கையின்படி, 

நமது கழகத்தின் மாவட்ட, ஒன்றிய நகர பகுதியில் வட்ட பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தோழர்களுடன் இணைந்து 20-9-2021 திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் தங்களின் இந்த முன்பு கருப்புக் கொடி கண்டன போராட்டத்தில் ஈடுபட்ட வேண்டும் என்றும், மாவட்ட கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள் தத்தமது மாவட்டத்திலுள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து நடைபெறும் கண்டன போராட்டத்தை சிறப்பாக நடத்திட ஏற்பாடு செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மதச்சார்பற்ற இந்திய குடியரசை பாதுகாப்போம் என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!