பயத்தின் உச்சத்தில் திமுக கூட்டணி கட்சிகள்.. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பகீர் தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Sep 17, 2021, 11:27 AM IST
Highlights

நீட் பிரச்சனைக்கு எல்லாம் வாய் திறக்காத திமுகவின் தோழமை கட்சிகள், ஆளுநர் நியமனத்திற்கு மட்டம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், இது அவர்களுக்கு திமுகவின் மீதுள்ள பயத்தின் உச்சம் என்றுதான் கூற வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நீட் பிரச்சனைக்கு எல்லாம் வாய் திறக்காத திமுகவின் தோழமை கட்சிகள், ஆளுநர் நியமனத்திற்கு மட்டம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், இது அவர்களுக்கு திமுகவின் மீதுள்ள பயத்தின் உச்சம் என்றுதான் கூற வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்த  நாளை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக சார்பில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோகுல இந்திரா உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் பேசியதாவமு, தந்தை பெரியாரின் புகழை போற்றும் வகையில் அவர் விரும்பிய இட ஒதுக்கீடு முதல் அனைத்திலும் அவர்வழியில் நடக்கிறது அதிமுக என்றார். அதிமுகவைப் பொறுத்தவரையில் ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் இருந்த அதே கூட்டணியே தொடர்கிறது என்றும், ஆனால் பாமக மட்டும் தனித்து போட்டியிடுகிறது என்றார். நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ஆலோசனை மையத்தை முன்கூட்டியே ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்று கூறிய அவர்.

தேர்விற்கு தயாராகாத சூழல்தான் தோல்விக்கு காரணம் என்றும், அதனால்தான் மாணவர் தனுஷ் உட்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர் என கூறினார். திமுகவின் கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரையில் நீட் பிரச்சனைக்கு எல்லாம் வாய் திறக்காதவர்கள், ஆளுநர் நியமனத்திற்கு மட்டும் வாய்திறந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், இதையெல்லாம் யார் சொல்லி செய்கிறார்கள், திமுக தோழமை கட்சிகள் திமுகவுக்கு வெண் சாமரம் வீசுகிறார்கள், இதனை பயத்தின் உச்சம் என்று தான் சொல்லவேண்டும் என அவர் கூறினார்.
 

click me!