
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கி வந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து சென்னையை சேர்ந்த காசிமாயன் என்பவர் ஆர்டிஐயில் தகவல் கேட்டு இருந்தார். அதன் படி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தகவலில், 2010-11ம் ஆண்டு ரூ.3.56 கோடியும், 2011-21ம் ஆண்டில் 1.12 கோடி ரூபாயும், 2012-13ல் 103.64 கோடியும், 2013-14ல் ரூ.64.44 கோடி ரூபாயும், 2019-20ம் ஆண்டுகளில் 64.44 கோடிக்கு நஷ்டமும் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுவிறபனை மூலமாக கிடைக்கும் வருவாயில் தான் தமிழக அரசே இயங்கி வருகிறது என பலரும் கூறி வந்தனர். இந்நிலையில் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தகவல் வெளியாகி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.