மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதை செய்யுங்க !! மோடிக்கு சோனியா அறிவுரை !!

By Selvanayagam PFirst Published Dec 21, 2019, 9:41 AM IST
Highlights

பொது மக்களளின்  குரலுக்குச் செவி சாய்க்க வேண்டியது அரசின் கடமை ஆனால்  பாஜக அரசு மக்களின் குரல்களை முற்றிலும் புறக்கணிப்பதுடன், முரட்டுத் தனமான சக்தியைப் பயன்படுத்தி வருகிறது. இது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாதது

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.பொது மக்கள், மாணவர்களின் போராட்டத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வீடியோ மெசேஜ் மூலம் பேசிய சோனியா காந்தி, மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பாஜக அரசால் கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகக் காங்கிரஸ் ஆழ்ந்த வருத்தத்தையும், அக்கறையையும் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

”பாஜக அரசின் பிரிவினைவாத கொள்கைகளுக்கும், மக்கள் விரோத செயல்களுக்கும் எதிராகப் பல்கலைக் கழகங்கள், ஐஐடி, ஐஐஎம் மற்றும் பல கல்வி நிறுவனங்களில் தன்னெழுச்சியாக போராட்டங்கள் எழுந்துள்ளன. 

ஜனநாயகத்தில் ஒரு அரசின் தவறான கொள்கைகளையும், முடிவுகளை எதிர்த்துப் போராட மக்களுக்கு உரிமை இருக்கிறது. அவர்களின் குரலுக்குச் செவி சாய்க்க வேண்டியது அரசின் கடமை. பாஜக அரசு மக்களின் குரல்களை முற்றிலும் புறக்கணிப்பதுடன், முரட்டுத் தனமான சக்தியைப் பயன்படுத்தி வருகிறது. இது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவின் இதுபோன்ற செயல்களைக் கண்டிப்பதாகவும், காங்கிரஸ் எப்போதும் மாணவர்களுக்கும் மக்களுக்கும் தோழமையாக இருக்கும் என்று தெரிவித்துள்ள சோனியா காந்தி, ”குடியுரிமை திருத்தச் சட்டமும், என்.ஆர்.சி திட்டமும் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். இதனால் மக்கள் தங்களது மற்றும் முன்னோர்களின் குடியுரிமையை நிரூபிக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள்” என்றார்

click me!