எத்தனை நாளைக்கு இரட்டை நாக்கு ரஜினி..? நீண்ட நாள் கழித்து சூப்பர் ஸ்டாரை கிழித்து தொங்கவிட்ட திமுக!

By Asianet TamilFirst Published Dec 21, 2019, 9:26 AM IST
Highlights

வழக்கம்போலவே ரஜினியின் இந்தப் பதிவும் ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்றன. இந்த விவகாரத்தில் ரஜினியை பலரும் விமர்சித்துவருகிறார்கள். வழக்கம்போல ஆளுங்கட்சிக்கு ஆதரவான நிலைப்பாடாக இது தெரிவதாக விமர்சித்துவருகிறார்கள். குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் போராடிவரும் திமுக தரப்பில் தகவல் தொழில்நுட்ப அணியினர் ரஜினியை விமர்சித்துவருகிறார்கள். இந்நிலையில் ரஜினியைக் கண்டித்து திமுகவின் கலைஞர் தொலைக்காட்சியில் கட்டுரை ஒன்று எழுதப்பட்டுள்ளது.

ரஜினியை விமர்சிப்பதில் தயக்கம் காட்டிவந்த திமுக, நீண்ட நாட்கள் கழித்து விமர்சித்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ரஜினி இட்ட ட்விட்டர் பதிவை வைத்து அவரை விமர்சித்து திமுகவின் தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சி இணையத்தில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.


குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் இருந்த ரஜினி, நேற்று முன் தினம் இரவு ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடக்கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்று ரஜினி தெரிவித்திருந்தார்.


வழக்கம்போலவே ரஜினியின் இந்தப் பதிவும் ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்றன. இந்த விவகாரத்தில் ரஜினியை பலரும் விமர்சித்துவருகிறார்கள். வழக்கம்போல ஆளுங்கட்சிக்கு ஆதரவான நிலைப்பாடாக இது தெரிவதாக விமர்சித்துவருகிறார்கள். குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் போராடிவரும் திமுக தரப்பில் தகவல் தொழில்நுட்ப அணியினர் ரஜினியை விமர்சித்துவருகிறார்கள். இந்நிலையில் ரஜினியைக் கண்டித்து திமுகவின் கலைஞர் தொலைக்காட்சியில் கட்டுரை ஒன்று எழுதப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரையின் சாரம்சம்.


* ”பிரச்சினை” - என்ன பிரச்சினை? இப்போது இருக்கிற அரசியல் சூழலை வைத்து பார்க்கும்போது, குடியுரிமைச் சட்டம் 2019 தான் எதிர்ப்பு என்று எடுத்துக்கொள்வோம். சரி, குடியுரிமை சட்டம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதில் ஏன் ரஜினிக்கு தயக்கம்.
*  அது ஒரு பிரச்னையா என்று அமித் ஷா தன் மீது கோபம் கொள்வாரோ என்ற பயமா?. இல்லை, ’குடியுரிமை சட்டப் பிரச்சினை’ என்பதை சேர்த்துவிட்டு, வன்முறை தீர்வாகாது என்று சொல்வதனால், தான் பா.ஜ.க ஆதரவானவன் என்பதை வெளிப்படையாக மக்கள் தெரிந்து கொள்வார்கள் என்ற பயமா சூப்பர்ஸ்டார்?
* நான் என்ன நிலைப்பாடு எடுக்கிறேன் என்பதை வெளிப்படையாக அறிவிக்கவே இவ்வளவு பயம் கொள்ளும் ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்கி அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்துவாரா என்று மக்கள் மனதில் கேள்விகள் ஓட ஆரம்பித்து இருக்கும்.


* சக நடிகர், நண்பர், அரசியல் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூட தன் நிலைப்பாட்டை அறிவித்துவிட்டார். தன் நிலைப்பாட்டிலேயே இவ்வளவு தெளிவில்லாமல் இருக்கும் ஒருவர் எப்படி ஒரு நல்ல தலைவராக இருக்கமுடியும்?
* 11 மணிக்கு ட்வீட், அமித்ஷாவுக்கு பயமா? இன்னும் எத்தனை நாளைக்கு இந்த இரட்டை நாக்குப் பேச்சு ரஜினி?


* தன் ஒரு துளி வியர்வைக்கு, ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்து உயர்த்திவிட்ட மக்களுக்காக எப்போது குரல் கொடுக்கப்போகிறார் ரஜினி? என்கிற கேள்விகள் சாதாரண பொதுமக்கள் மட்டுமல்லாது, அவர்களது ரசிகர்களிடையேயும் எழுந்துள்ளது.
இவ்வாறு ரஜினியை விமர்சித்து நீண்ட கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினியை விமர்சித்து கட்சிப் பத்திரிகையான முரசொலியில் கட்டுரை ஒன்று வெளிவந்தது. ஆனால், கட்டுரை வெளிவந்த அடுத்த நாளே, அந்தக் கட்டுரை வந்ததற்கு வருத்தம் தெரிவித்து முரசொலியில் பெட்டிச் செய்தி வெளியானது. இதனால், ரஜினியை விமர்சிப்பதில் திமுக பயப்படுகிறது என்ற கருத்தும்கூட பொதுவெளியில் வைக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் கலைஞர் தொலைக்காட்சியில் ரஜினியை விமர்சித்து தற்போது கட்டுரை வெளியாகி உள்ளது. இக்கட்ரைக்கும் திமுக தரப்பில் வருத்தம் தெரிவிக்காமல் இருந்தால் சரி! 

click me!