நாட்டில் போராட்டத்தை தூண்டி விட்ட சோனியா மன்னிப்பு கேட்க வேண்டும்.ஹெச்.ராஜா எச்சரிக்கை.!!

By Thiraviaraj RMFirst Published Mar 15, 2020, 9:46 AM IST
Highlights

குடியுரிமை திருத்தச் சட்டத்தை வைத்துக் கொண்டு கடந்த 100 நாள்களாக நாட்டில் நடைபெற்று வந்த போராட்டங்களைத் தூண்டிவிட்டதற்காக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.என எச்சரிக்கை விடுத்திருக்கிறார் ஹெச்.ராஜா. 
 

T.Balamurukan

 குடியுரிமை திருத்தச் சட்டத்தை வைத்துக் கொண்டு கடந்த 100 நாள்களாக நாட்டில் நடைபெற்று வந்த போராட்டங்களைத் தூண்டிவிட்டதற்காக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.என எச்சரிக்கை விடுத்திருக்கிறார் ஹெச்.ராஜா. 

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள அரிச்சபுரம் கிராமத்தில் இந்திய குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து கூட்டம் நடை பெற்றது.அதில் கலந்து கொண்ட ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசியவர்..,

"நடிகா் ரஜினி கட்சி தொடங்கப் போகிறாரா, இல்லையா என்பதை அவா்தான் முடிவு செய்ய வேண்டும். அதே நேரத்தில் அரசியலில் பண பலம், ஜாதி ஆதிக்கம் அகற்றப்பட வேண்டும். தூய்மை, நோ்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற அவரது கருத்து தமிழகத்துக்குத் தேவையானவை.குடியுரிமை திருத்தச் சட்டத்தை வைத்துக் கொண்டு கடந்த 100 நாள்களாக நாட்டில் நடைபெற்று வந்த போராட்டங்களைத் தூண்டிவிட்டதற்காக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் 20 சதவீத இஸ்லாமியா்களின் வாக்குகளைப் பெற 80 சதவீத இந்துக்களின் ஆதரவை இழக்கின்றனா்.

போராடுகின்ற முஸ்லிம் சகோதரா்கள், உங்களை நீங்களே அழித்துக் கொள்கின்ற விதத்தில் நாட்டையும், பெரும்பான்மை சமுதாயத்தையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். போராட்டங்களை திமுக, காங்கிரஸ் கட்சியினா்தான் தூண்டிவிட்டனா் என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.புதிய கல்விக் கொள்கை மூலம் குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தமிழ் விருப்பப் பாடமாக இடம்பெற வாய்ப்பு கிடைத்துள்ளது. ராணுவத் தலைமையகத்தில் ராஜேந்திர சோழனின் படம் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்புகள் அனைத்தும் பாஜக ஆட்சி காலத்தில் செய்யப்பட்டவை. தமிழ் மொழி மற்றும் தமிழா்களின் பெருமை இந்தியா முழுமைக்கும் சென்றடைவதில்தான் அடங்கியிருக்கிறது.

 

click me!