தமிழக அமைச்சர்கள் என்ன வேலை செய்கிறார்கள் தெரியுமா..? ரகசியத்தை உடைக்கிறார் எம்பி மாணிக்கம் தாகூர்.!!

By Thiraviaraj RMFirst Published Mar 14, 2020, 10:08 PM IST
Highlights

முதல்வரை மகிழ்விப்பது மட்டுமே அமைச்சரின் வேலை இல்லை. அமைச்சர் விஜயபாஸ்கர் போன்றோர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்"என எச்சரிக்கை விடுத்துள்ளார் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர்.
 

T.Balamurukan

முதல்வரை மகிழ்விப்பது மட்டுமே அமைச்சரின் வேலை இல்லை. அமைச்சர் விஜயபாஸ்கர் போன்றோர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்"என எச்சரிக்கை விடுத்துள்ளார் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர்.

திண்டுக்கல்லில் ரூ.325 கோடி மதிப்பில் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினர்.முன்னதாக, மதுரை வந்த முதல்வருக்கு கப்பலூரில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக சாலையின் இருபுறங்களிலும் மக்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர்.

இதையெல்லாம் சுட்டிக்காட்டிய விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், "கொரோனா வைரஸ் தாக்குதலால், உலகம் முழுவதும் பொது நிகழ்ச்சிகள், அரசு விழாக்கள் ரத்தாகி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் முதல்வரின் வருகைக்காக மதுரையில் வரவேற்பு, திருமங்கலத்தில் வரவேற்பு, பெருங்கடியில் வரவேற்பு என ஊர் ஊருக்கு ஏழை பொதுமக்களை சாலைகளில்ரூ.200 கொடுத்து நிறுத்திவைக்கும் அவலம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

பிரதமரே எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார். மற்ற அமைச்சர்களுக்கும் இது அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால், தமிழகத்தில் கொரோனா வந்துவிட்ட நிலையிலும் முதல்வரும், அமைச்சர்களும் பொறுப்பாக நடந்து கொள்ளாமல் அப்பாவி மக்களை கூட்டி வைத்து புகழ்பாடிக்கொண்டிருக்கிறார்கள்.வளர்ந்த நாடுகளே, பார்த்து அஞ்சிக்கொண்டிருக்கும் கொரோனாவை பொறுப்பற்ற விதத்தில் அணுகுவதும் கண்டிப்புக்குரியது.முதல்வரை மகிழ்விப்பது மட்டுமே அமைச்சரின் வேலை இல்லை. அமைச்சர் விஜயபாஸ்கர் போன்றோர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்" என்று எச்சரித்தார் அவர்.

click me!