#UnmaskingChina:லடாக் விவகாரம் அனைத்துக்கட்சி கூட்டத்தில் சோனியா எழுப்பிய 7 சந்தேகங்கள்..மவுனம் காத்த பிரதமர்!

By T BalamurukanFirst Published Jun 20, 2020, 10:10 AM IST
Highlights

லடாக்கில் உள்ள கல்வான் எல்லைக்குள் சீனத் துருப்புக்கள் எந்த நாளில் ஊடுருவின? நம் எல்லைக்குள் சீன மீறல்கள் குறித்து அரசாங்கம் எப்போது கண்டுபிடித்தது?

இந்தியா சீனா இடையே பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது சீன ராணுவம் இந்திய வீரர்களை கொடூரமாக ஆணி கம்பிகளை கொண்டு திட்டமிட்டே தாக்கியிருப்பது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20பேர் பலியானதாக பாதுகாப்பு துறை செய்தி வெளியிட்டுள்ளது.சீன ராணுவ வீரர்கள் 35பேர் பலியானதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
லடாக் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் என்ன நடந்தது என்பதை பிரதமர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்திருந்தார். இதனடிப்படையில் பிரதமர் மோடி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினார். 

அந்த கூட்டத்தில் சுமார் 20 கட்சிகள் கலந்து கொண்டன.உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதே நேரத்தில் காயமடைந்த ஜவான்கள் விரைவாக குணமடைய இறைவனை வேண்டுவதாகவும் பிராத்தனை செய்யப்பட்டது.

அனைத்து கட்சி கூட்டத்தை அரசாங்கம் முன்பே அழைத்திருக்க வேண்டும் என்று சோனியா காந்தி கருத்து தெரிவித்தார். எல்லையில் உள்ள நிலைமை குறித்து எல்லோரும் இன்னும் இருட்டில் இருப்பதாக கூறிய, சோனியா காந்தி சில குறிப்பிட்ட கேள்விகளை அந்த கூட்டத்தில் எழுப்பினார். அப்போது அவர் சுமார் 7 கேள்விகளை எழுப்பியனார். இதற்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர் எழுப்பிய கேள்விகள் கீழே....

"லடாக்கில் உள்ள கல்வான் எல்லைக்குள் சீனத் துருப்புக்கள் எந்த நாளில் ஊடுருவின? நம் எல்லைக்குள் சீன மீறல்கள் குறித்து அரசாங்கம் எப்போது கண்டுபிடித்தது? எல்லையுடன் இணைந்த எந்தவொரு அசாதாரண நடவடிக்கையையும் நமது வெளிபுலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கவில்லையா? எல்லை ஊடுருவல் மற்றும் பெரிய சக்திகளை உருவாக்குவது குறித்து இராணுவ புலனாய்வு அரசாங்கத்தை எச்சரிக்கவில்லையா?” என்று கேள்வியெழுப்பினார்.

இந்த விவகாரத்தை தீர்ப்பதற்கான அனைத்து வழிகளையும் அரசாங்கம் பயன்படுத்தத் தவறியதால் தான் 20 உயிர்கள் பறிபோனதாக மத்திய அரசு மீது குற்றம்சாட்டினார்.எல்லை பாதுகாப்பு சம்மந்தமாக என்ன நடக்கிறது நடந்திருக்கிறது என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்கிற வேண்டுகோளையும் பிரதமருக்கு வைத்திருக்கிறார் சோனியாகாந்தி.
 

click me!