மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ராவை பாராட்டிய ஆளுநர்.!! நெகிழ்ந்த போன நேத்ரா..! மதுரைக்கு கிடைத்த பெருமை.!

By T BalamurukanFirst Published Jun 19, 2020, 9:29 PM IST
Highlights

இந்திய தேசத்தில் வாழ்கின்ற அனைவருக்கும் முன்மாதிரியாக செயல்பட்டுள்ளீர்கள் என சலூன் கடைக்காரர் மகள் நேத்ராவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடிதம் எழுதியுள்ளார்.
 

இந்திய தேசத்தில் வாழ்கின்ற அனைவருக்கும் முன்மாதிரியாக செயல்பட்டுள்ளீர்கள் என சலூன் கடைக்காரர் மகள் நேத்ராவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில்  தன் மகள் நேத்ராவின் படிப்பு செலவிற்காக வைத்திருந்த பணத்தை ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருளாக வழங்கினார் மோகன். இதனைப் பாராட்டிய இந்திய பிரதமர்  மோடி.." முடிதிருத்தும் தொழிலாளி மோகனின் இந்த சேவையை குறித்து "மன் கி பாத்" நிகழ்ச்சியில் பாராட்டி பேசியிருந்தார். அதன்பிறகு ஐநா-வால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனமான யூஎன்ஏடிஏபி, நேத்ராவை உலக ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதுவராக அறிவித்தது.

ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி நேத்ராவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன.தமிழக முதல்வரும் பாராட்டி படிப்பு செலவை அரசு ஏற்கும் என்று அறிவித்திருந்தார்.இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாணவியின் ஏற்றவை பாராட்டி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில்.. "யுஎன்ஏடிஏபியால் ஏழைகளுக்கான நல்லெண்ண தூதுவராக தாங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,இந்த கடினமான காலகட்டத்தில் ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும் உதவிய உங்களின் நல்லெண்ணத்தை பாராட்டி இந்த கருத்தினை அந்த நிறுவனம் வழங்கியுள்ளது.

13 வயதில் தாங்கள் அடைந்த இந்த உன்னதமான நிலைக்கு தங்களின் எண்ணமும், நோக்கமுமே காரணம்,கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் தங்களின் செயல், அனைத்து வயதினருக்கும் ஊக்கமளிக்க கூடிய ஒன்றாக அமைந்துள்ளது,இந்தியா முழுமைக்கும் குறிப்பாக தமிழகத்திற்கு முன்மாதிரியாக தாங்கள் செயல்பட்டு உள்ளீர்கள்.

இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் உங்களுக்கும் உங்கள் பெற்றோர்களுக்கும், குறிப்பாக மோகனுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அனைத்து மகிழ்ச்சியையும்,செழிப்பையும் அளிக்கும்படி இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

click me!