சோனியாவை குஷிப்படுத்திய ஸ்டாலின் சென்டிமென்ட்! டெல்லியில் பறக்குதுய்யா தளபதி கொடி... கடுப்பாகிறாராம் கனிமொழி?

By vinoth kumarFirst Published Dec 11, 2018, 12:43 PM IST
Highlights

டெல்லி சென்ற முதல் நாளில் சோனியாவை சந்தித்த ஸ்டாலின் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி, புத்தகமொன்றை பரிசளித்து ’இந்த பிறந்தநாள் உங்களுக்கு மிக ஸ்பெஷல். இனி வரும் நாட்கள் உங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷங்களை கொண்டு வரும். கைவிட்டு சென்ற விஷயங்கள் மீண்டும் உங்களை வந்தடையும். வாழ்த்துக்கள்.’ என்று மனப்பூர்வமாக வாழ்த்தினார். 

கருணாநிதி மறைந்த நிலையில், தி.மு.க.வின் தலைவராக தேசத்தின் தலைநகர் டெல்லி சென்றார் ஸ்டாலின். வட இந்திய அரசியல் பெரிதாய் பரிச்சயமில்லாத நிலையில் ஸ்டாலின் அங்கே என்ன சாதிக்கப்போகிறார்? என்று அ.தி.மு.க, பி.ஜே.பி. உள்ளிட்ட தளங்களில் இருந்து நக்கல் கலந்த கமெண்டுகள் வந்து விழுந்தன. 

டெல்லி சென்ற முதல் நாளில் சோனியாவை சந்தித்த ஸ்டாலின் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி, புத்தகமொன்றை பரிசளித்து ’இந்த பிறந்தநாள் உங்களுக்கு மிக ஸ்பெஷல். இனி வரும் நாட்கள் உங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷங்களை கொண்டு வரும். கைவிட்டு சென்ற விஷயங்கள் மீண்டும் உங்களை வந்தடையும். வாழ்த்துக்கள்.’ என்று மனப்பூர்வமாக வாழ்த்தினார். 

பொதுவாக ஸ்டாலினை இந்திரா குடும்பத்துக்கு ஆகாது. இந்திராகாந்தியின் எமர்ஜென்ஸியில் வெகுவாய் அடிபட்ட நபர் ஸ்டாலின். அவரது அரசியல் வளர்ச்சிக்கும் அதுவே பாதையாய் அமைந்தது. ஆனால் முதல்வர் கருணாநிதியின் மகனையே கைது செய்து, சிறையில் சிதைத்துவிட்டார்கள்! என்று தென்னகம் எங்கும் காங்கிரஸுக்கு எதிரான அதிர்வலைகள் தோன்றியது. இதை இந்திராகாந்தி ரசிக்கவில்லை. அவருக்குப் பின் வந்த ராஜீவ் கருணாநிதி வகையறாவை தன்னோடு சேர்த்துக் கொள்ளவில்லை. பின் வந்த சோனியா, கருணாநிதியிடம் நட்பு முகம் காட்டுவாரே தவிர ஸ்டாலினை கண்டு கொள்ள மாட்டார். ராகுலும் அம்மா பாணியையே பின்பற்றினார். 

ஸ்டாலினுக்கும், ராகுலுக்குமான பனிப்போரே தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் உயிர்ப்பே இல்லாத நிலைக்கு காரணம்! என்பார்கள் விமர்சகர்கள். ஆனால் இந்த முறை ஸ்டாலினின் அணுகுமுறையும், ஏதோ தன் மூத்த சகோதரியை வாழ்த்துவதுபோல் சோனியாவை அவர் ட்ரீட் செய்த விதமும் சோனியாவையும், ராகுலையும் வெகுவாய் கவர்ந்துவிட்டது. 

ஸ்டாலின் வாழ்த்தியது போலவே இரண்டே நாட்களில் இதோ வெளிவந்து கொண்டிருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள், சோனியாவை குஷிப்படுத்தியிருக்கின்றன. அதிரிபுதிரியாக காங்கிரஸ் முன்னிலை பெறாவிட்டாலும் கூட, எல்லா  மாநிலத்திலும் பி.ஜே.பி.யை விட அதிக சீட்களை பெற்றுக் கொண்டுள்ளது காங்கிரஸ். ஐந்து ஆண்டுகள் தங்களைக் கதறவிட்ட பி.ஜே.பி.க்கு இதோ இன்றுடன் சரிவு காலம் துவங்கிவிட்டது என்று களிக்கிறார் ராகுல்! சோனியாவுக்கும் பெரிய சந்தோஷம். 

டெல்லியில் ஸ்டாலின் சோபிப்பாரா? என்று தமிழக எதிர்கட்சிகள் விமர்சித்த நிலையில், ஸ்டாலினின் பயணமும் அதை ஒட்டி நடக்கும் பி.ஜே.பி.யின் சரிவும் தளபதியின் கொடியை உயரப்பறக்க வைக்கின்றன வடக்கே! என்று கூத்தாடுகிறார்கள் தி.மு.க.வினர். ஆனால் அதேவேளையில் ராஜ்யசபா எம்.பி.யாகவும், தி.மு.க.வின் டெல்லி முகமாகவும் கடந்த சில வருடங்களாக தலைநகரில் வலம் வந்து கொண்டிருக்கும் கனிமொழிக்கு, ஸ்டாலினின் இந்த திடீர் டெல்லி எழுச்சியானது கடுப்பை தந்துள்ளது என்கிறார்கள்.

click me!