பரபரப்பான சூழ்நிலையில் வைகோவை சந்திக்கிறார் திருமாவளவன்!

By vinoth kumarFirst Published Dec 11, 2018, 12:11 PM IST
Highlights

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை இன்று பகல் 12 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்திக்கிறார். இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை இன்று பகல் 12 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்திக்கிறார். இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு தனது முகநூலில் தலித்தை வேலைக்காரர்களாக வைத்திருக்கிறேன் என்று வைகோ கூறுவது சாதீய ஆதிக்கமாகவும், நிலபிரபுத்துவ ஆதிக்கமாகவும் பார்ப்பதாக பதிவிட்டிருந்தார். உடனே அந்த பதிவை நீக்கிவிட்டார். 

இதையடுத்து சாத்தூரில் மதிமுக வாக்குச்சாவடிகள் முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வைகோ, வன்னியரசுவின் முகநூல் பதிவை கடுமையாக விமர்சித்தார். மேலும் ஆரம்ப காலகட்டத்தில் தேர்தல் செலவுக்காக திருமாவுக்கு 50 லட்சம் கொடுத்ததாக தெரிவித்தார்.

 

இதைத்தொடர்ந்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளிடித்த திருமாவளவன் வைகோவிடம் பணம் பெற்றது உண்மை தான் என்றார். தேர்தலுக்கு பணம் அளித்ததை ஏன் வைகோ கூறினார் என்பது புரியவில்லை என்றார். இதனால் திருமாவளவன்-வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனை சரி செய்ய திருமாவளவன், வைகோவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதுடன், சந்திக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் இன்று பகல் 12 மணிக்கு வைகோ சந்திக்கிறார். மேலும் இந்த சந்திப்பின் போது கூட்டணி தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

click me!