இந்தியாவிலேயே முதன்முதலா சட்டப்படி நடந்த வித்தியாசமான கல்யாணம் !! எப்படி தெரியுமா ?

Asianet News Tamil  
Published : May 11, 2018, 12:51 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
இந்தியாவிலேயே முதன்முதலா சட்டப்படி நடந்த வித்தியாசமான கல்யாணம் !! எப்படி தெரியுமா ?

சுருக்கம்

Something different marriage in kerala

கேரளா மாநிலத்தில் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவரும், ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவரும், பெற்றோர் சம்மதத்துடன் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் பொது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் இஷான். பெண்ணாகப் பிறந்து பின்னர் மருத்துவ சிகிச்சை மூலமாகஆணாக மாறியவர். அதே போல் ஆணாகப் பிறந்த சூர்யா, தனக்குள் ஏற்பட்ட பெண்மையை உணர்ந்து பெண்ணாக மாறியவர். இவர்கள் இரு வரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் அறிமுகமாகி இருக்கின்றனர்.

ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய இவர்கள் நாட்கள் செல்லச் செல்ல காதலர்களாக மாறியுள்ளனர். சூர்யா தனது மனைவியாக வந்தால், தனது வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என எண்ணிய இஷான், தனது காதலை சூர்யாவிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு சூர்யாவும் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார்.இவர்களது முடிவுக்கு இரு வீட்டா ரும் சம்மதம் தெரிவிக்கவே, நேற்று  உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரது முன்னிலையிலும் இருவனரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்தியாவிலேயே  மாற்றுப்பாலின காதலர்கள் முதன்முறையாக சட்டப்படி திருமணம் செய்துகொண்டது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. திருநங்கை ஒருவரும், திருநம்பி ஒருவரும்  விரும்பி  செய்து கொண்ட திருமணத்துக்கு ஏராளமானோர் வருகை தந்து வாழ்த்தினர்.

PREV
click me!

Recommended Stories

விஜய் கூட்டணிக்கு வேண்டாம்..! டெல்லியின் கணக்கை தவிடுபொடியாக்கும் எடப்பாடி..! அதிமுக-வின் 'மாஸ்டர் பிளான்'!
2011ல் விஜயகாந்த்.. 2026ல் பிரேமலதா.. திமுக கூட்டணியில் வைகோவுக்கு ஆப்பு வைத்த தேமுதிக..!