234 தொகுதியிலும் தனித்து போட்டி. அதிமுக-திமுகவுக்கு மாற்று.? இந்துக்கள் அநாதையாக நிற்கிறோம் -அர்ஜூன் சம்பத்.

By Ezhilarasan BabuFirst Published Feb 15, 2021, 2:21 PM IST
Highlights

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த முடிச்சூரில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜீன் சம்பத் தலைமையில் தமிழகத்தில் ஆன்மிக அரசியல் ஆட்சி அமைந்திட மற்றும் 2021 தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. 

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த முடிச்சூரில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜீன் சம்பத் தலைமையில் தமிழகத்தில் ஆன்மிக அரசியல் ஆட்சி அமைந்திட மற்றும் 2021 தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக தேமுதிக கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்வதில் தாமதம் செய்யப்பட்டுவரும் நிலையில் தமிழகத்தில் மூன்றாவது அணி அமையுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் மூன்றாவதாக அணி அமைய வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என்றார். 

திமுக- அதிமுகாவுக்கு மாற்றாக நல்ல சக்தி வர வேண்டும் என்றார். ஆனால் இப்போதைய சூழ்நிலைக்கு ரஜனிகாந்த் கட்சி ஆரம்பிக்காத காரணத்தால் அமையக் கூடும் மூன்றவாத அணி எத்த அளவிற்கு வலிமையாக இருக்கும் என்பதை கணிக்கமுடியாது என்றார். அதிமுகவில் சசிகலாவை இணைத்துக் கொள்ள வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது, ஒரு வேளை சசிகலா தணித்து தேர்தலில் நின்றால் தேர்தல் களம் எப்படி இருக்கும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், சசிகலா அதிமுக விவகாரம் எல்லாம் அவர்களிடம் கேட்டு கொள்ளூங்கள். அதற்கு நான் பதில் சொல்ல முடியாது என்றார். 

எங்களை பொறுத்தவரையில் நாங்கள் 243 தொகுதியிலும் தணித்து நிற்க உள்ளோம், வரும் தேர்தலில் இந்துக்கள் அனாதையாக நிற்கிறோம் என்றார், மூன்றாவது அணி அமையும் பட்சத்தில் இந்து மக்கள் கட்சி அந்த அணிக்கு ஆரதவு அளிக்குமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்து மக்கள் கட்சியின் வழி தனி வழி. ரஜினி வருவார் என்று எதிர்பார்த்தோம்,  ஆனால் அவர் வரவில்லை, ரஜினிகாந்த அரசியலுக்கு வரதாத காரணத்தால், நாங்கள் ஆன்மிக அரசியலை முன்னெடுத்து செல்கிறோம். சூழ்நிலைக்கு ஏற்பா முடிவு எடுப்போம். எதையும் நாங்கள் உடனடியாக சொல்ல முடியாது என்றார். 
 

click me!