நாட்டு மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.. கியாஸ் சிலிண்டர் விலையேற்றம் குறித்து ராகுல் காந்தி ஆதங்கம்.

By Ezhilarasan BabuFirst Published Feb 15, 2021, 1:32 PM IST
Highlights

மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 95 க்கு விற்கப்படுகிறது, கடந்த 6 நாட்களாக நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு தகுந்தாற்போல இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றமடைந்து வருகிறது.  

இரண்டு பேரின் வளர்ச்சிக்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களிடம் இருந்தும் கொள்ளை அடிக்கிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கேஸ் சிலிண்டர் விலை உயர்வு தொடர்பான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர் இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

சமையல்  கியாசின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தி உள்ளன. இது ஒட்டுமொத்த சாமானிய மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரக்கூடும் என்ற ஆபத்து ஏற்பட்டுள்ளது. பலகட்ட விலையேற்றத்திற்குப்பின்னர் கடந்த 2020 இறுதிவரை 710 ரூபாய்க்கு கியாஸ் சிலிண்டர் விற்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த மாதத்தின் தொடக்கத்தில் அதன் விலை மீது, கூடதலாக  25 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால் 1 சிலிண்டரின் விலை 735 விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது எண்ணெய் நிறுவனங்கள் ஒரு சிலிண்டர் மீது மேலும் 50 ரூபாய் உயர்த்தி  உள்ளன. இதனால் ஒரு சிலிண்டர் 785 ரூபாய்க்கு விற்கப்படும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே சிலிண்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத் தொகையும் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளன, இதனால் இந்த விலையேற்றம் பொதுமக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் உயர்ந்துள்ள நிலையில், தற்போது சமையல் கியாஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சில இடங்களில் 90 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது, மத்திய பிரதேசத்தில் பிரீமியம் பெட்ரோல் விலை 100 தாண்டியுள்ளது. 

மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 95 க்கு விற்கப்படுகிறது, கடந்த 6 நாட்களாக நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு தகுந்தாற்போல இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றமடைந்து வருகிறது. எனவே சர்வதேச சந்தையின் நிலவரத்தைப் பொறுத்து விலை மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. அதேபோல சமையல் எரிவாயு விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது டுவிட்டரில் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருப்பதற்கான செய்தியை பகிர்ந்துள்ள அவர்," இரண்டு பேரின் வளர்ச்சிக்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களிடமிருந்தும் கொள்ளை அடிக்கப்படுகிறது"  என தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார். 

 

click me!