ஜெயலலிதா வழியில் அடிபிறழாமல் முதல்வர் ஆட்சி நடத்துகிறார்.. முதல்முறையாக எடப்பாடியாரை புகழ்ந்த ஓபிஎஸ்..!

Published : Feb 15, 2021, 01:08 PM IST
ஜெயலலிதா வழியில் அடிபிறழாமல் முதல்வர் ஆட்சி நடத்துகிறார்.. முதல்முறையாக எடப்பாடியாரை புகழ்ந்த ஓபிஎஸ்..!

சுருக்கம்

திமுகவின் ஆட்சியை தகர்த்தெறிய அச்சாரமாக விளங்கியது கொங்கு மண்டலம் தான். கொங்கு மண்டலம் அதிமுகவின் எஃகு கோட்டை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

திமுகவின் ஆட்சியை தகர்த்தெறிய அச்சாரமாக விளங்கியது கொங்கு மண்டலம் தான். கொங்கு மண்டலம் அதிமுகவின் எஃகு கோட்டை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா வருகிற 24-ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்திருந்தார். அதன்படி கோவை-சிறுவாணி ரோடு பேரூர் செட்டிப்பாளையத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டது. அங்கு இன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் 123 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற்றது.

இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு 123 ஜோடிகளுக்கும் மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.

திருமண விழாவில் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம்;- ஜெயலலிதா வழியில் அடிபிறழாமல் முதல்வர் பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார். ஒரு கட்சி எப்படி செயல்பட வேண்டும் என மாற்றிக் காட்டியவர் ஜெயலலிதா. திமுகவின் ஆட்சியை தகர்த்தெறிய அச்சாரமாக விளங்கியது கொங்கு மண்டலம் தான். கொங்கு மண்டலம் அதிமுகவின் எஃகு கோட்டை. சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப் பெற்று ஜெயலலிதாவுக்கு நன்றி கடன் ஆற்ற வேண்டும் என பேசினார்.

பின்னர் முதல்வர் பழனிசாமி பேசுகையில்;- சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக. நமக்கு சாதி, மதம் பேதமில்லை. திருமண உதவி திட்டத்தின் கீழ் 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். மணமக்களுக்கு சீர்வரிசை கொடுத்த ஒரே கட்சி அதிமுக தான். ஏழை மக்கள் மீது அதிக பாசம் கொண்டவர் ஜெயலலிதா. காற்றில் பறக்கவிடும் வாக்குறுதிகளை அளிப்பது திமுக தான் என முதல்வர் விமர்சனம் செய்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

அனிதா மரணத்தை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!
களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி