வெரும் 3 பேருக்கு வைரஸ் தொற்று வந்ததற்கே, ஒட்டுமொத்த சிட்டியையும் மூடிய நியூசிலாந்து.. அலறும் பிரதமர் ஜெசிந்தா

By Ezhilarasan BabuFirst Published Feb 15, 2021, 12:08 PM IST
Highlights

இதுதொடர்பாக நேற்று தொலைக்காட்சியில் உரையாடிய ஜெசிந்தா, நாட்டு மக்களுக்கும், நாட்டிற்கும் சேவை செய்யும் முயற்சியாக இந்த ஊரடங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் தந்தை மகள் என மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியதைத் தொடர்ந்து நியூசிலாந்தின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான ஆக்லாந்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனா வைரசை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிறப்பாக தடுத்த நாடுகளில்  நியூசிலாந்தும் ஒன்று. அந்நாட்டில் இதுவரை மொத்தம் 2330 பேர் மட்டுமே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் இறந்தவர்கள் எண்ணிக்கை வெறும் 25 ஆகும்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்த போதும், சிறிய தீவு நாடான நியூஸிலாந்து வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்து கொரோனா இல்லாத நாடாக உருவெடுத்தது. 

அதேபோல் வெளிநாட்டில் இருந்து நியூஸிலாந்துக்கு வருபவர்களை மிக சிறப்பாக கையாண்டு நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் பார்த்துக்கொண்டது. கொரோனா வைரஸை சிறப்பாக கட்டுப்படுத்தியதன் காரணமாக ஜெசிந்தா ஆர்டன், மீண்டும் நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் நியுசிலாந்தில் வைரஸ் தொற்று பரவ தொடங்கியுள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தமுறை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் தந்தை மகள் என மூன்று பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நியூசிலாந்தின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான ஆக்லாந்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது முழு ஊரடங்காக இருக்கும் என்றும் அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக நேற்று தொலைக்காட்சியில் உரையாடிய ஜெசிந்தா, நாட்டு மக்களுக்கும், நாட்டிற்கும் சேவை செய்யும் முயற்சியாக இந்த ஊரடங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலமாகவே வைரஸ் தொற்று பரவுகிறது, தற்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது, அது அவர்களுக்கு எவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவி ஸ்டெசில் சர்வதேச விமான நிலையத்தில் பணி புரிகிறார், அங்கிருந்து அவர் மூலம் இந்த வைரஸ் தொற்று பரவி இருக்கக் கூடும் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனால் ஆக்லாந்து மக்கள் எப்போதும் வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும், சமூக விலகல் விதிகளை கடைப்பிடிக்கவும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

இதனால்  நூலகங்கள் அருங்காட்சியகங்கள், ஜிம்கள் மற்றும் திரையரங்குகள் போன்ற பல வணிக வளாகங்கள் மற்றும் பொது இடங்கள் மூடப்பட்டுள்ளன. அதேபோல ஆக்லாந்தின் எல்லையும் மூடி சீல் வைக்கப்படும் எனவும், மக்கள் உரிய அனுமதி பெற்ற பின்னரே அவர்கள் எல்லையை கடக்க முடியும் என பிரதமர் கூறியுள்ளார். மற்ற நகரங்களிலும் 100 பேருக்கு மேல் கூட கூடாது என அவர் உத்தரவிட்டுள்ளது குறிபிடத்தக்கது.

 

click me!