ஜெயலலிதா இயற்கையாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனை சென்றார்கள்.. ஆனால் திரும்பிவரவில்லை.. அமைச்சர் அதிரடி.

Published : Feb 15, 2021, 01:55 PM IST
ஜெயலலிதா இயற்கையாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனை சென்றார்கள்.. ஆனால் திரும்பிவரவில்லை.. அமைச்சர் அதிரடி.

சுருக்கம்

ஜெயலலிதா இயற்கையாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனை சென்றார்கள். திரும்பி வந்து விடுவார் என நினைத்தோம். ஆனால் வரவில்லை, அவரின் ஆசை என்னுடைய தலைமையில் பிரமாண்ட சினிமா துறை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பதுதான். 

ஜெயலலிதா இயற்கையாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனை சென்றார்கள். திரும்பி வந்து விடுவார் என நினைத்தோம் ஆனால், வரவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியுள்ளார். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் 2021-2023 ஆம் ஆண்டிற்கான புதிய் நிர்வாகிகள் பதவியேற்பு, அறிமுக விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வெற்றி சான்றிதழை வழங்கினார். 

அதன் பின்னர் மேடையில் பேசிய அவர் கூறியதாவது, "நடிகர் சங்க தேர்தல் முடிவடையாதது வருத்தமளிக்கிறது. அது நடந்து முடிந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். பெப்சி தொழிலாளர்கள்  எந்த நேரம் கோரிக்கை வைத்தாலும் முதல்வரை உடனடியாக அணுகியதன் மூலம் அவர் 100 க்கு 90% முடித்து கொடுத்துள்ளார். சினிமா என்றால் செல்வம் கொழிக்கும் துறை என்ற எனது எண்ணத்தை மாற்றியது பெப்சி தொழிலாளர்களின் வாழ்வாதார நிலை, கலைமாமணி விருது வழங்கும் நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது என்றார். 

ஜெயலலிதா இயற்கையாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனை சென்றார்கள். திரும்பி வந்து விடுவார் என நினைத்தோம். ஆனால் வரவில்லை, அவரின் ஆசை என்னுடைய தலைமையில் பிரமாண்ட சினிமா துறை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பதுதான். திருச்சியில் தியாகராஜ பாகவதர் மணிமண்டபம் கட்டும் பணி விரைவில் முடிவடைய உள்ளது. சில நாட்களில் முதல்வர் தலைமையில் அதன் திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் புதிய திரைப்படங்கள் ஓடிடி யில் வெளியானது. அது தொடர்பான பிரச்சனையை தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளர், விநியோகஸ்ர்கள் கூடி பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும். அரசு உங்களுக்கு துணை நிற்கும்", என்றார். 

 

PREV
click me!

Recommended Stories

அனிதா மரணத்தை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!
களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி