திமுகவில் துரைமுருகனுக்கு இவ்வளவுதான் மரியாதை..?? ஸ்டாலின் எடுக்கும் முடிவே இறுதி, நழுவிய RS பாரதி .

By Ezhilarasan BabuFirst Published Nov 28, 2020, 1:27 PM IST
Highlights

பணம் இல்லாதவர்கள் எதற்கு மருத்துவம் படிக்க வேண்டும் என திமுக பொது செயலாளர் துரை முருகன் கூறியதாக செய்தியாளர்கள் கேட்ட போது, அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் சொல்வதே இறுதியானது என ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

தமிழச்சி தங்கபாண்டியன் (MP)திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கோடம்பாக்கம் அரசு மகப்பேறு மருத்துவமனையில்  நேற்று பிறந்த 6 பெண் குழந்தைகள் மற்றும் 4 ஆண் குழந்தைகளுக்கு தங்க மோதிரமும் வெள்ளி கொலுசுகளும் வழங்கும் நிகழ்ச்சி திமுக தென் மேற்கு இளைஞரணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி தென்மேற்கு இளைஞரணி செயலாளர் ராஜா அன்பழகன் உள்ளிட்டோர் கோடம்பாக்கம் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு வருகை தந்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வெள்ளி கொலுசுகலும் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ் பாரதி,  7 தமிழர் பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநரை திமுக சந்தித்து பேசுவதை நாடகம் என அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு நகைச்சுவை நடிகர் என தெரிவித்தார். அதேபோல் ஓரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தில் தங்களுக்கு எந்தவித உடன்பாடும் இல்லை என அவர் கூறினார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கியதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நடத்திய போராட்டமே காரணம் என தெரிவித்தார். 

பணம் இல்லாதவர்கள் எதற்கு மருத்துவம் படிக்க வேண்டும் என திமுக பொது செயலாளர் துரை முருகன் கூறியதாக செய்தியாளர்கள் கேட்ட போது, அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் சொல்வதே இறுதியானது என ஆர்.எஸ்.பாரதி கூறினார். இதை தொடர்ந்து கோடம்பாக்கம் மகப்பேறு மருத்துவமனைக்கு வருகை தந்த தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேர்தலுக்கு 5 மாதம் இருக்கும் முன்பே உதயநிதி பிரச்சாரத்தை தொடங்கி இருப்பது கட்டாயமா அல்லது பயமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மக்களை சென்று நாங்கள் சந்திக்கும் நிலைக்கு எங்களை ஆளும் அதிமுக அரசு தள்ளி இருப்பதாக கூறினார்.

 

click me!