வேட்பாளர் பட்டியல்! மாவட்டச் செயலாளர்கள் ரிப்போர்ட்.. கிராஸ் செக் செய்த இபிஎஸ்.. வேகமெடுக்கும் தேர்தல் பணி..!

By Selva KathirFirst Published Nov 28, 2020, 12:09 PM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் ஏறக்குறைய இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதிமுகவும் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் ஏறக்குறைய இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதிமுகவும் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ பேக் நிறுவனத்தின் கள ஆய்வின் அடிப்படையில் திமுக சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை மு.கஸ்டாலின் கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டார். தொகுதிவாரியாக யார் யார் வேட்பாளர் என மாவட்டச் செயலாளர்களிடம் திமுக தலைமை தெரிவித்துவிட்டது. இந்த தகவல்களை ரகசியமாக வைத்திருப்பதுடன் தற்போது முதலே கட்சிக்காரர்களுக்கு வேட்பாளர் யார் என்பதை மறைமுகமாக உணர்த்தும் படியும் உத்தரவு சென்றுள்ளது. அதோடு பொங்கல் பண்டிகையோடு மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை துவக்க உள்ளார்.

அந்த பிரச்சாரங்களின் போது தொகுதி வாரியாக இறுதி செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக தலைமையிடம் இருந்து உத்தரவு சென்றுள்ளது. திமுக இப்படி சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்டி வரும் அதே வேளையில் அதிமுக தரப்பிலும் வேட்பாளர் தேர்வு தொடங்கிவிட்டதாக கூறுகிறார்கள். அதிமுகவை பொறுத்தவரை கடந்த காலங்களில் மாவட்டச் செயலாளர்களின் பரிந்துரையின் அடிப்படையில் தான் ஒருவரை ஜெயலலிதா நேர்காணலே செய்வார்.

அதே பாணியில் மாவட்டச் செயலாளர்களிடம் தொகுதி வாரியாக தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பாதி மாவட்டச் செயலாளர்கள் தங்கள் தொகுதிக்கான வேட்பாளர்கள் என்று ஒரு பட்டியலை அதிமுக தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறுகிறார்கள். இந்த பட்டியலை வைத்து முதலமைச்சர் எடப்பாடியாரின் இல்லத்தில் இரவு பகலாக ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக சொல்கிறார்கள். மாவட்டச் செயலாளர் பரிந்துரைத்துள்ள நபர் யார், எத்தனை வருடங்களாக கட்சியில் உள்ளார், இதற்கு முன்னர் வேறு கட்சியில் இருந்துள்ளாரா என்பதை எல்லாம் எடப்பாடி பழனிசாமியே நேரடியாக கிராஸ் செக் செய்வதாக கூறுகிறார்கள்.

அதோடு மட்டும் அல்லாமல் சிட்டிங் எம்எல்ஏக்கள் பலரை மாவட்டச் செயலாளர்கள் தற்போது பரிந்துரைக்கவில்லை என்கிறார்கள். இதற்கான காரணத்தை மாவட்டச் செயலாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு எடப்பாடியே விசாரிப்பதாகவும் கூறுகிறார்கள். அத்துடன் மாவட்டச் செயலாளர்கள் கூறும் காரணம் உண்மை தானா என்று உளவுத்துறை மூலமாக எடப்பாடி கள ஆய்வு செய்து வருவதாகவும் சொல்கிறார்கள். இந்த அடிப்படையில் வட மாவட்டங்களில் கிட்டத்தட்ட வேட்பாளர் பட்டியலில எடப்பாடி ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

தென் மாவட்டங்களில் மட்டும் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் முன்பு ஓபிஎஸ்சுடன் ஆலோசிக்க எடப்பாடி முடிவு செய்துள்ளதாக கூறுகிறார்கள். இதே போல் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் ஒரு சில தொகுதிகளில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுக்கு சீட் வேண்டும் என்று எடப்பாடி தரப்பை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் ஓபிஎஸ் சீட் கொடுக்கச் சொல்லும் நபர்கள் யார் என்கிற பின்னணியை எடப்பாடி தரப்பு ஆராய்ந்து வருகிறது. இதே போல் தென் மாவட்டங்களிலும் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் அவர்களின் பின்னணியையும் எடப்பாடி தரப்பு ஆராய ஆரம்பித்துள்ளது.

வேட்பாளர் தேர்வில் யாரையும் நம்பாமல் தன்னையே முழுக்க முழுக்க நம்பி எடப்பாடி களம் இறங்கியிருப்பதாக கூறுகிறார்கள். மேலும் சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மறுபடியும் சீட் கொடுக்க வேண்டும் என்பது தான் எடப்பாடியின் தீர்க்கமான முடிவு என்கிறார்கள். அந்த அடிப்படையில் கிட்டத்தட்ட 100 தொகுதிகளுக்கு தற்போதைய எம்எல்ஏக்களையே களம் இறக்க எடப்பாடி முடிவு செய்துவிட்டதாகவும் அவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிற புளுபிரின்ட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

click me!