சசிகலாவுக்காக இவ்வளவு பில்டப்பா..? தீ பற்றி எரிந்த 2 கார்கள்..!

Published : Feb 08, 2021, 12:42 PM IST
சசிகலாவுக்காக இவ்வளவு பில்டப்பா..? தீ பற்றி எரிந்த 2 கார்கள்..!

சுருக்கம்

 அவருக்கு ஏன் இவ்வளவு பிடப் கொடுக்கிறார்கள் என மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.   

சசிகலா தமிழகம் வருகிறார் என கடந்த ஒரு வாரமாக பரபரப்பாக பேசப்பட்டது. அவரை 500 முதல் 1000 கார்கள் பின்தொடரும் என அமமுகவினர் பிதற்றி வந்தனர். 

ஆனால், மிகக்குறைந்த அளவிலான கார்கள் மட்டுமே அவரை தற்போது பின்தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.செல்லும் இடத்தில் எல்லாம் கூட்டம் அள்ளும் என கூறப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி முதல் லெகேசனிலே வெறும் 200-250 பேர் மட்டுமே இருந்தனர். அதிலும் பாதி பேர் பத்திரிக்கையாளர்களே. சிறையில் இருந்து தண்டனை அனுபவித்து வெளியில் வரும் சசிகலா என்ன தியாகியா..? அவருக்கு ஏன் இவ்வளவு பிடப் கொடுக்கிறார்கள் என மக்கள் பேசிக் கொள்கிறார்கள். 

இந்நிலையில், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் சசிகலாவை வரவேற்பதற்காக வந்த கார்களில், இரண்டு கார்களில் தீப்பற்றியது. கார் முழுக்க பட்டாசு இருந்ததால் பட்டாசு வெடிக்கும் போது தீப்பொறி பற்றி கார் முழுக்க தீ பரவியது. தற்போது தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி