கார் கொடுத்த சம்பங்கி... கதற வைத்த சசிகலா..!

Published : Feb 08, 2021, 11:41 AM IST
கார் கொடுத்த சம்பங்கி... கதற வைத்த சசிகலா..!

சுருக்கம்

பெங்களூருவில் இருந்து சசிகலா வந்த காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டதை அடுத்து அதிமுக கொடியுடன் கூடிய வேறு ஒரு காரில் சசிகலா பயணிக்கிறார்.   

பெங்களூருவில் இருந்து சசிகலா வந்த காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டதை அடுத்து அதிமுக கொடியுடன் கூடிய வேறு ஒரு காரில் சசிகலா பயணிக்கிறார். 

சசிகலா வந்த காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டதை அடுத்து அதிமுக கொடியுடன் கூடிய வேறு ஒரு காரில் சசிகலா பயணிக்கிறார். சிறையில் இருந்து சசிகலா வெளியேறியதும் அவர் தங்க சென்ற பண்ணை வீட்டுக்கு ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியுடன் பயணித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அவர் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என அதிமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 

இந்நிலையில் பெங்களூருவில் இருந்து அவர் தமிழகத்துக்கு இன்று பயணித்து வருகிறார். அவர் பயணித்த காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, காரில் உள்ள அதிமுக கொடியை போலீஸார் அகற்றினர். இதனால் சசிகலா, அதிமுக கொடி பொருத்தப்பட்ட வேறு ஒரு காரில் பயணிக்கிறார். தமிழக எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை சேர்ந்த அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சம்பங்கி தலைமையில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த சம்பங்கி காரில் அதிமுக கொடி கட்டப்பட்டு இருந்தது. அந்தக்காரில்தான் தமிழக எல்லையில் மாற்றி ஏறி சசிகலா பயணித்து வருகிறார். இதனால் சசிகலா மீது காவல்துறையினரால் நடவடிக்கை எடுக்க முடியாமல் போயிற்று. 

சசிகலா காரில் அதிமுக கொடியை அகற்றவில்லை. அதற்காக கிருஷ்ணகிரி போலீஸார் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதனை சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பெற்றுக்கொண்டார். 
 

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!