மு.க.ஸ்டாலினை உற்சாகப்படுத்திய சசிகலா... புதுத் தெம்பில் திமுக..!

Published : Feb 08, 2021, 11:13 AM IST
மு.க.ஸ்டாலினை உற்சாகப்படுத்திய சசிகலா... புதுத் தெம்பில் திமுக..!

சுருக்கம்

சசிகலாவின் வருகையும், அவர் அதிமுக கொடியை பயன்படுத்தி வருவதும் எடப்பாடி தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.   

சசிகலாவின் தமிழக வருகை மு.க.ஸ்டாலினை உற்சாகப்படுத்தி இருக்கிறது. கடந்த சில மாதங்களாக வெற்றி பெற முடியுமா என்கிற சந்தேகத்தில் பல விளம்பரங்கள், பிரச்சாரங்கள் என பல அஸ்திரங்களை ஏவி வந்தார் மு.க.ஸ்டாலின். பல கோடிகளை வாரியிறைத்து ஊர் ஊராக ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஆகியோர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், திமுக 200 தொகுதிகளை கைப்பற்றும் எனத் தெரிவித்து இருந்தார் மு.க.ஸ்டாலின். இதனையடுத்து சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி தமிழகம் வருகிறார். இதனால் எடப்பாடி பழனிசாமி, சசிகலா விஸ்வரூபம் எடுத்துவிடக்கூடாது என பல வழிகளில் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். சசிகலாவின் வருகையும், அவர் அதிமுக கொடியை பயன்படுத்தி வருவதும் எடப்பாடி தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. 

இது திமுக தரப்பை உற்சாகப்படுத்தி இருக்கிறது. அதிமுக இரண்டுபடுவது திமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கும் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில் மு.க.ஸ்டாலின், தற்போது, ‘’நான் திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனக் கூறியிருந்தேன். அது தவறு. 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்’’ எனக் கூறி இருக்கிறார். சசிகலா- எடப்பாடி தரப்புக்கு இடையே எழுந்துள்ள மோதலை கருத்தில் கொண்டே மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Thaimaman Thanga Mothiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் யாருக்கெல்லாம் கிடைக்கும்? தொடங்கியது கணக்கெடுப்பு..! பேரு குடுத்தாச்சா?
Rahul Gandhi: சாதி ரீதியான சர்ச்சை பேச்சு? ராகுல் காந்தி மீது பாய்ந்தது வழக்கு!